வீணாகும் மகளிர் குழு கட்டடங்கள்:: மாற்று பயன்பாட்டுக்கு வழங்கினால் பயன்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:42

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், மகளிர் குழு கட்டடங்கள் பயன்பாடின்றி வீணாகின்றன; அவற்றை மாற்று பயன்பாட்டிற்கு வழங்கினால், மக்களுக்கு பயன்படும்.மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாநில அரசு பெண்கள் மேம்பாட்டுக் கழகம் மூலம் முதன்முதலில், 1989ம் ஆண்டு தர்மபுரியில் துவங்கப்பட்டது.


சேமிப்பு, கடன், காப்பீடு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் இக்குழுக்கள், அரசின் ஆதரவு மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக மிக வேகமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவின.தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 59 லட்சம் குழுக்கள் இயங்கி வந்தன.


அதன் பின், குழுக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். மகளிர் குழுக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியது. அதில் முக்கியமானது, சுய தொழில் செய்யும் குழுக்களுக்கு உதவியாக, ஊராட்சி பகுதியில் பயிற்சி மற்றும் பணிமனை கூடங்கள் அமைத்து தந்தது. பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், நுாற்றுக்கணக்கான மகளிர் குழு கட்டடங்கள் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டன.ஆனால், அவற்றில் ஒன்று கூட தற்சமயம் பயன்பாட்டில் இல்லை என்பது நம்ப முடியாத அவல நிலையாகும். அரசியல் கட்சியினர், உள்ளூர் பிரமுகர்கள், ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி செயலர்களின் தலையீடுகள் காரணமாக, மகளிர் குழுக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டன.


இதனால், மகளிர் குழுக்களை சார்ந்தவர்கள் பொதுக்கட்டடங்களை பயன்படுத்துவது குறைந்து போனது. தற்போது, மகளிர் குழு கட்டடங்கள் பூட்டி வைத்து பயன்பாடின்றி வீணாகி வருகிறது.அந்த கட்டடங்களை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்புகள் நடத்துவது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X