செவிலியர் பணியிடம் நிரப்பாததால் மருத்துவ சேவை பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:43

ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் பற்றாக்குறையால், மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளில், 68 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மக்கள் வசதிக்காக, வளந்தாயமரம், ஆனைமலை, காளியாபுரம், டாப்சிலிப் உள்பட, ஏழு இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.


கிராமப்பகுதிகளில் எளிதாக மருத்துவ வசதிகள் பெற, ரமணமுதலிபுதுார், சோமந்துறைசித்துார், அங்கலக்குறிச்சி, ஆத்துப்பொள்ளாச்சி உள்பட மொத்தம், 32 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.இங்கு, காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ அறிவுரைகள் வழங்குவது, சர்க்கரை, ரத்த அழுத்தம் அளவிடுவது உள்ளிட்ட மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது.இந்நிலையில், இரண்டு ஆண்டுகளாக, சோமந்துறைசித்துார், ரமணமுதலிபுதுார் உட்பட மொத்தம், எட்டுக்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களில் செவிலியர் பணியிடம் காலியாக உள்ளது.இதனால், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.


காய்ச்சல் அதிகமாக பரவும் மழைக்காலங்களில், வெகு தொலைவு பயணித்து ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டூர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அல்லது தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.செவிலியர் பணியிடம் காலியாக இருப்பதால், ஓரிடத்தில் பணியாற்றும் செவிலியர் அருகிலுள்ள துணை சுகாதார நிலையத்தையும் கூடுதலாக கவனிக்கின்றனர்.


இதனால், பணிச்சுமை அதிகரித்து சிரமப்படுகின்றனர்.மேலும், ரமணமுதலிபுதுார், சோமத்துறைசித்துார், கரியாஞ்செட்டிபாளையம் உள்பட, செவிலியர் இல்லாத இடங்களில் துணை சுகாதார நிலையங்கள் பூட்டப்பட்டு காட்சிப்பொருளாக உள்ளது.கட்டடங்கள் பயன்பாடின்றி உருக்குலைந்து மக்கள் வரிப்பணம் வீணாகிறது. செவிலியர் பணியிடங்களை சுகாதாரத்துறையினர் நிரப்ப வேண்டும்; மருத்து சேவையை கிராமங்களில் தடையின்றி வழங்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X