| தேங்கும் குப்பையால் தவிக்கும் பொதுமக்கள் Dinamalar
தேங்கும் குப்பையால் தவிக்கும் பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:46

வால்பாறை:வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் தேங்கும் குப்பையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள திறந்தவெளிக் குப்பை கிடங்கில், பல ஆண்டுகளாக கொட்டப்படுகிறது.


வால்பாறை நகராட்சியில் துாய்மை இந்தியா திட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், குப்பைக்கழிவுகளால் நகரில் தினமும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.வால்பாறை நகரில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படாததால், நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது.சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் வால்பாறை நகரில் பல இடங்களில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பை மலை போல் தேங்கி கிடக்கின்றன.குப்பை அகற்றப்படாததால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வால்பாறை நகரில் உள்ள குப்பை தொட்டிகளில், தினமும் குப்பையை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X