வனம், காட்டுயிர்கள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
00:47

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், வனத்துறையினர் 'பிளாஸ்டிக் இல்லா ஆனைமலை புலிகள் காப்பகம்' என்பதை வலியுறுத்தி, வனத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றி, உலக தினம் கொண்டாடினர்.ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 22ம் தேதி உலக தினம் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது.


அழிந்துவரும் வனம், சூழல் மாசுபாடு உள்ளிட்டவையால், பூமி எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 1970ல் இருந்து உலக தினம் கொண்டாடப்படுகிறது.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியாறில், நேற்று வனத்துறையினர் உலக தினம் கொண்டாடினர்.இதில், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து, பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம், வனக்காவல்படை வனச்சரக அலுவலர் மணிகண்டன், வனவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'பிளாஸ்டிக் இல்லா ஆனைமலை புலிகள் காப்பகம்' என்பதை வலியுறுத்தி, ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து குரங்கு அருவி வரையில், ரோட்டோரத்தில் சுற்றுலா பயணிகள் வீசிச்சென்ற பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.


ஆல்வா செவிலியர் பயிற்சிப்பள்ளி மாணவிகள், 30 பேர் வனத்துறையுடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றினர்.அதேபோல், வனத்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் பிளாஸ்டிக் கழிவுகளை பறிமுதல் செய்து, மக்கும் வகையிலான துணிப்பை இலவசமாக வழங்கினர். பிளாஸ்டிக் மற்றும் காட்டுத்தீயினால், வனத்துக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நோட்டீஸ் வினியோகித்தனர்.அனைவரும் வனத்தை பாதுகாக்க முன்வர வேண்டுமென்று வலியுறுத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மாரிமுத்து கூறியதாவது:பெய்யும் மழைநீரை தன்னுள் தக்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடும் காடுகள் தான், நமக்கு குடிநீர் வழங்குகிறது. வனவிலங்குகள் காட்டை அழியாமல் பாதுகாப்பதுடன், எச்சங்களின் மூலம் விதைகளை பரப்பி காடுகளின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது.ரோட்டோரம் பிளாஸ்டிக் கழிவுகளை சர்வ சாதாரணமாக வீசுகின்றனர். அந்த கழிவுகளை உட்கொண்டு வனவிலங்குகள் பரிதாபமாக மரணிக்கிறது.மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் தண்ணீரை ஊடுருவிச் செல்வதற்கு தடையாக உள்ளது. இது போன்ற காரணங்களால், காடுகள் அழிந்து, பூமித்தாய்க்கு பேராபத்து ஏற்படுகிறது. காடுகள் அழிந்தால் உலகில் எந்த உயிர்களும் வாழ முடியாது. காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.


விரைவில் பழச்சோலை!ஆனைமலையிலுள்ள வனச்சரக அலுவலகத்தில், உலக தினத்தையொட்டி, மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர். அந்த வளாகத்தில், ஐந்து மாதங்களுக்கு முன், 162 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.வனத்துறையினர் கூறுகையல், 'பறவைகள் வனத்தின் காவலர்களாக உள்ளன. அவற்றின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆனைமலை அலுவலகத்தில், நாவல், பலா, அத்தி உள்ளிட்ட பழ மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. நாளடைவில், பழச்சோலையாக மாறும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X