| அருப்புக்கோட்டையில் மழை தெருக்களில் ஓடியது கழிவு நீர் Dinamalar
அருப்புக்கோட்டையில் மழை தெருக்களில் ஓடியது கழிவு நீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:02

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் கன மழை பெய்ததால் மழையுடன் கழிவு நீர் கலந்து தெருக்களில் வெள்ளமாக ஓடியது.



அருப்புக்கோட்டையில் வாட்டி வதைத்த வெயிலை தாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். இ நேற்று முன்தினம் மாலை திடிரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அரை மணி நேரத்தில் 37 மி.மீ.,மழை பதிவாகியது. ரோடுகள், தெருக்கள் வெள்ளக் காடானது.பூக்கடை பஜார் பகுதியில் வழக்கம் போல் மழை நீடுருடன் கழிவு நீர் கலந்து வெள்ளமாக ஓடியது. டெலிபோன் ரோடு பகுதியில்நேரு மைதானம் பகுதி உள்ளிட்டபல இடங்களில் வாறுகால்கள் அடைபட்டு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வெள்ளக் காடானது. முக்கிய ரோடுகளில் உள்ள மெயின் வாறுகால்களில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பை தேங்கி அடைப்பு ஏற்படுகிறது. பூக்கடை பஜார் பகுதி மெயின் வாறுகால் ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுகளை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. நகராட்சி சுகாதார பிரிவினர்மெயின் வாறுகால்களை துப்புரவு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை.இதுவே ரோடு,தெருக்கள் வெள்ளக்கடாவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. வாறுகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கழிவு நீர் மற்றும் மழை நீர் சீராக செல்ல வழி செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X