| மனு கொடுக்க ஊர்வலமாக வந்த மக்கள் Dinamalar
மனு கொடுக்க ஊர்வலமாக வந்த மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:07

சிவகாசி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்த பெண்களை இழிவாகவும் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகாசி ஆனையூர் , அய்யம்பட்டி, லட்சுமியாபுரம், காந்திநகர், இந்திரா நகர் பகுதி முத்தரையர் சங்கத்தை சேர்ந்த 500 க்கு மேற்பட்டோர் சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர். போலீசார் அனுமதிக்கவில்லை. கோஷமிட்டனர். இதன் பின் மனு கொடுக்க 5 பெண்களை மட்டுமே போலீசார் உள்ளே அனுமதித்தனர். தினகரன் ஆர்.டி.ஓ., மனுவை பெற்றுக் கொண்டார். 500 க்கு மேற்பட்டோர் ரோட்டில் நின்றதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X