செயல்படாத சுகாதாரவளாகம்: பயமுறுத்தும் ஓட்டை பாலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:17

ஸ்ரீவில்லிபுத்துார் : செயல்படாத சுகாதாரவளாகம், ஓட்டை விழுந்த பாலம், குண்டும், குழியுமான ரோடு, எரியாத தெரு விளக்குகள், சேதமடைந்த அங்கன்வாடி மையம், பயன்படாத இடத்தில் கட்டபட்ட நிழற்குடை என பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் லட்சுமியாபுரம் மக்கள்.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் நத்தம்பட்டி ஊராட்சிக்குட்பட்டது லட்சுமியாபுரம். முழுக்க விவசாய கூலித்தொழிலாளர்கள் நிறைந்த இக்கிராமத்தில் பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் பெரிதும் அவதியடைகின்றனர்.ரோட்டின்கீழ்புறம் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயிலுக்கும், மழைக்கும் நடுரோட்டில் நின்று தான் மக்கள் பயணிக்கவேண்டியுள்ளது. இங்குள்ள சுகாதாரவளாகம் கட்டி பயன்பாட்டிற்கு வராதநிலையில் கடந்தாண்டு ம் பராமரிப்புகள் செய்யபட்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. அங்கன்வாடி மையம் சேதமடைந்து கிடக்கிறது. தெருக்களில் கட்டபட்டுள்ள சிறுபாலங்கள் ஓட்டை விழுந்தும், ரோடுகள் ஜல்லி கற்கள் பெயர்ந்தும் காணப்படுகிறது. பல இடங்களில் தெருவிளக்குகள் இருந்தும் எரியாமல் உள்ளது. மயானத்திற்கு செல்லும்பாதை , மயான மேற்கூரை சிதைந்து காணப்படுகிறது. சமுதாய கூடமில்லாததால் கிராம மக்கள் வீட்டின் நல்லது, கெட்டது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த சிரமப்படுகின்றனர். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து லட்சுமியாபுரத்து மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.சமுதாயகூடமின்றி சிரமம்லட்சுமியாபுரத்தில் 200க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு சமுதாயகூடமும், பொதுகுளியல் தொட்டியும் இல்லாததால் இப்பகுதி மக்கள் வீட்டு சுபகாரியங்களை நடத்துவதற்கு சிரமப்படுகின்றனர். குறைவாக வரும் தண்ணீரையே பயன்படுத்தி காலத்தை கழிக்கிறோம். பொதுகுளியல் தொட்டி மற்றும் சமுதாயகூடத்தை விரைந்து சீரமைக்கவேண்டும். -கோட்டைமுனியாண்டி, குடியிருப்பாளர், லட்சுமியாபுரம்.சுகாதார சீர்கேட்டால் அவதிஇங்குள்ள தெருக்களில் தினசரி துப்பரவு பணி மேற்கொள்ளவில்லை. கிராம கழிவுநீர் வாறுகல்களில் குப்பை , நிரம்பி சுகாதாரக்கேடு, துற்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. மக்களுக்கு நோய்பரவும் நிலை காணப்படுகிறது. கூடுதல் பணியாளர்களை நியமித்து கழிவுகளை உடனடியாக அப்பறப்படுத்த வேண்டும். - தங்க முனியாண்டி, குடியிருப்பாளர், லட்சுமியாபுரம்.எரியாத மின் விளக்குகள் இங்கு பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் இருக்கிறது. ஆனால் எரிவதில்லை. இதனால் இருளில் வசிக்கும்நிலையே உள்ளது. இதிலும் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எங்கள் கிராமம் அமைந்துள்ளதால் அதிகளவில் பஸ்கள் சென்றாலும் மிகவும் குறைந்த நேரங்களே இயங்கும் டவுன் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அதிலும் பயணியர் நிழற்குடை இல்லாதது மக்களை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. -தமிழ்செல்வன், குடியிருப்பாளர், லட்சுமியாபுரம்.பயமுறுத்தும் மயானம்இங்குள்ள மயானத்திற்கு செல்லும் பாதை பல ஆண்டுகளாக சீரமைக்கபடவில்லை. முறையான ரோடு வசதியில்லாததால் இறந்தவர்களை கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் மயானத்தில் மேற்கூரையும் அச்சுறுத்தும் விதத்தில் உள்ளது. அடிகுழாய் பல ஆண்டுகளாக செயல்படவில்லை. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. -பொன்னுசாமி, குடியிருப்பாளர், லட்சுமியாபுரம்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X