இடியும் நிலையில் மேல்நிலை தொட்டிகள்.. அகற்றலாமே! அலட்சியத்தால் காத்திருக்கு பெரும் ஆபத்து
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:24

சாத்துார் : விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி என்ற பேதமின்றி பல இடங்களில் குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தி ,புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மாவட்டத்தில் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக பல இடங்களில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தொட்டிகளின் துாண்களில் கம்பிகள் பெயர்ந்தும், சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளது. ஆண்டுதோறும் தொட்டியின் உள்புறம் உள்ள கழிவுகளை அகற்றுவது போன்று சேதமடைந்த பகுதிகளில் பூச்சு வேலைகள் செய்யாமல் போனதால் இவற்றின் துாண்கள், படிகட்டுகள் சேதமடைந்து கான்கிரிட் கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளன. தற்போது பள்ளிக்கூடம் விடுமுறை என்பதால் ஆபத்தை உணராத மாணவர்கள் குழந்தைகள் மேல்நிலைத் தொட்டியின் நிழலில் விளையாடுகின்றனர். வேகமாக வீசும் காற்றுக்கு கூட தாங்காமல் ஒரு சில பகுதிகளில் தொட்டிகளில் இருந்து சிமென்ட் பூச்சுக்கள் கீழே விழுகின்றன. ஒரு சில பகுதிகளில் சேதமடைந்த தொட்டியின் அருகில் புதிய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் வினியோகம் மாற்றப்பட்ட போதும், பழைய தொட்டியை அகற்றாமல் விட்டதால் அவைகளால் விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த மேல்நிலை தொட்டிகளை கணக்கிட்டு அவற்றை அகற்ற வேண்டும்.அதே நேரத்தில் பெற்றோர்களும் சேதமடைந்த மேல்நிலைத் தொட்டிகள் அருகில் குழந்தைகள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X