| காயங்களுடன் மரத்தில் வடமாநில நபர் சடலம் Dinamalar
காயங்களுடன் மரத்தில் வடமாநில நபர் சடலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:26

மதுக்கரை,:எட்டிமடை அருகே காட்டுப்பகுதியில், காயங்களுடன் மரத்தில் தொங்கிய வடமாநிலத்தவர் சடலத்தை போலீசார் மீட்டனர்.மதுக்கரையை அடுத்த எட்டிமடை அருகே காட்டுப்பகுதி உள்ளது. நேற்று காலை, இங்குள்ள ஒரு மரத்தில் ஆண் ஒருவர், பெல்ட்டால் துாக்கு போட்டு தொங்கும் நிலையில் காணப்படுவதாக, மதுக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டனர்.


தலை மற்றும் உடலில் தாக்கப்பட்டு, காயமடைந்த அடையாளங்கள் காணப்பட்டன. சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.சட்டையிலிருந்த ஓட்டு போடும் பூத் சிலிப்பில், சூரன்மார்க்ஸ், 51, மேற்கு வங்காளம் எனும் முகவரி மற்றும் தொடர்பு எண்கள் இருந்தன.இரு நாட்களுக்கு முன், கோவைக்கு ரயிலில் வந்த டிக்கெட்டும் இருந்தது. இவர் யாருடன் கோவை வந்தார், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து, மதுக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X