| வேலை தருவதாக பணம் வசூலித்து மோசடி Dinamalar
வேலை தருவதாக பணம் வசூலித்து மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:38

கோவை,:வேலை தருவதாக பலரிடம் பணம் வசூலித்து, இனிப்பு கடை உரிமையாளர் மோசடி செய்ததாக, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேற்று காலை, 20க்கும் மேற்பட்டோர் வந்து ஒரு புகார் அளித்தனர்.அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:


கோவையில் இனிப்பு கடை நடத்தி வரும் ஒருவர், அதே பெயரில் பல்வேறு நிறுவனங்களையும் நடத்தி வந்தார். கடந்தாண்டு இவரது நிறுவனத்துக்கு ஆட்கள் தேவை என, அறிவித்தார். இதை பார்த்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் உட்பட, 75க்கும் மேற்பட்டோர் நேர்முக தேர்வுக்கு சென்றோம்.அப்போது வைப்பு தொகையாக, 15 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை நிறுவனத்தினர் வசூலித்தனர். ஆனால், பணத்தை பெற்றவர்கள் வேலை கொடுக்காமல் மோசடி செய்தனர். பணத்தை திருப்பி கேட்டபோது, 'செக்' கொடுத்தனர்.அதனை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது. மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X