| மாணவர்களுக்கு இலவச கல்வி: பாரதியார் பல்கலையில் மீண்டும் கிடைக்குமா? Dinamalar
மாணவர்களுக்கு இலவச கல்வி: பாரதியார் பல்கலையில் மீண்டும் கிடைக்குமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:39

கோவை;பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தின் கீழ், விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2006ம் ஆண்டு, அப்போதைய துணைவேந்தர் திருவாசகம் உத்தரவின்படி, பாரதியார் பல்கலை கட்டுப்பாட்டில் செயல்படும் கல்லுாரிகளில், இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இதன்படி, நல்ல மதிப்பெண் பெற்றும் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத மாணவர்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து, கல்லுாரிக்கு, 5 பேர் வீதம், கூடுதலாக சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. ஏழை மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில், பலத்த வரவேற்பை பெற்றது இத்திட்டம். ஆனால், சில கல்லுாரிகள் ஆர்வம் காட்டாததால், கடந்தாண்டு இலவச கல்வி நடைமுறை ரத்து செய்யப்பட்டது.


மீண்டும் செயல்படுத்த, ஏழை மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்கலை ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ஜெயக்குமார் கூறுகையில், சில குளறுபடிகள் காரணமாக, கடந்தாண்டு இலவச கல்வி நடைமுறைப்படுத்தப்படவில்லை. நடப்பு கல்வியாண்டில், கல்லுாரிகள் ஆர்வம் காண்பித்து விண்ணப்பித்தால், ஏழை எளிய மாணவர்களின் நலன் கருதி, அவ்விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X