கோவை,:திருச்சி அருகே இன்ஜினினியரிங் பணிகள் நடப்பதால், கோவை வழி ரயில்களின் இயக்கங்களில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, திருச்சி - பாலக்காடு பயணிகள் ரயில் திருச்சியில் இருந்து மதியம், 1:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம், 3:00 மணிக்கு புறப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து புறப்படும் ரயில் ஈரோடு - திருச்சி இடையே, இரண்டு மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகிறது. அதேபோல், கரூர் - திருச்சி, ஈரோடு - திருச்சி பயணிகள் ரயில் சில இடங்களில் பகுதி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.