| மதுபாட்டில்களை என்ன செய்வது அறியாமல் அதிகாரிகள் அவதி Dinamalar
மதுபாட்டில்களை என்ன செய்வது அறியாமல் அதிகாரிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
01:43

கோவை:தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த மது பாட்டில்களை, என்ன செய்வது என்று தெரியாமல், அதிகாரிகள் பரிதவித்து வருகின்றனர்.லோக்சபா தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் ரோந்து சுற்றிய பறக்கும் படையினர், 13.79 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.இதேபோல, தங்கம், நகை, சூட்கேஸ்கள், பட்டுப்புடவைகள், மது பாட்டில்கள், அரிசி, கோதுமை, துப்பாக்கிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.


இவற்றில், கடந்த 18ம் தேதி வரை 3.75 கோடி ரூபாயை, அவற்றின் உரிமையாளர்கள், உரிய ஆவணங்களை காட்டி, பெற்றுச் சென்றனர்.பறக்கும்படையினர் மாவட்டம் முழுவதும் ரோந்து சுற்றி, சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 4001 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இந்த பாட்டில்கள், அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றை, என்ன செய்வது, எத்தனை நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது பற்றி, எந்த உத்தரவும் இல்லாததால், அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X