மத்திய அரசின் விருதுகளுக்கானவிண்ணப்பங்கள் வரவேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
02:04

விழுப்புரம்:மத்திய அரசின் அர்ச்சுனா விருது, தயான்சந்த் விருது, ராஜீவ்காந்தி கேல்ரத்னா துரோணாச்சாரியா விருது மற்றும் ராஷ்டிரியா கேல் புரட்ஷான் புரஷ்கார் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


அர்ச்சுனா விருது 2019 விளையாட்டில் பன்னாட்டு அளவில், கடந்த நான்கு ஆண்டுகளாக சிறந்த சாதனை படைத்ததை தொடர்ந்து, விளையாட்டிற்கு தலைமை பொறுப்பேற்று வழிநடத்தும், விளையாட்டு வீரர்களுக்கானது. தயான்சந்த் விருது விளையாட்டு வளர்ச்சிக்கான ஆர்வலர்களுக்காகவும், ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அங்கீகரிக்கப்பட்ட பன்னாட்டு அளவிலான விளையாட்டு போட்டிகளில் கடந்த நான்கு ஆண்டுகளில் சிறந்த சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது.துரோணாச்சாரியா விருது முந்தைய 4 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க, விளையாட்டு சாதனையாளர்களை உருவாக்கிய விளையாட்டு பயிற்சிக்கும், ராஷ்டிரியா கேல் புரட்ஷான் புரஷ்கார் விருது அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனத்திற்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்தாண்டிற்கான காந்தி அமைதி பரிசு விருது அமைதி வழியில் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் ஏற்படுத்திய தலைசிறந்த தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் இந்தாண்டிற்கான அசோக் சக்ராவின் கேலன்டரி விருது வீரதீரச் செயல் புரிந்தமைக்கும் வழங்கப்படுகிறது.இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டரங்கில் ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X