| சங்கராபுரம் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை Dinamalar
சங்கராபுரம் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
02:04

சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது ஓரு மணி நேரம் காற்று மற்றும் இடியுடன் பெய்த மழையால் மரங்கள் வேறுடன் சாய்ந்தது.


சங்கராபுரம் பகுதியில் கோடை வெயிலின் தாக்கத்தால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.மரங்கள் வேறுடன் சாய்ந்தது:சங்கராபுரம் அடுத்த பூட்டை -அரசம்பட்டு சாலையில் பன மரம் மற்றும் வேப்ப மரம் வேறுடன் சாய்ந்தது. இதனால் சங்கராபுரம்-பாலபட்டு சாலையில் போக்குவரத்து அரை மணி நேரம் பாதித்தது. சாலையில் விழந்த மரங்கள் அகற்றபட்டு போக்குவரத்து சரி செய்யபட்டது. மழையால் சங்கராபுரம் பகுதி பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.மழைவேண்டி வருண ஜெபம் செய்ததால் கைமேல் பலன்கிடைத்துள்ளது.சங்கராபுரம் பகுதியில் கடும் வறட்சி காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மழை வேண்டி நேற்று தியாகராசபுரம் பெருமாள் கோவிலில் வருண ஜபம் நடந்தது.வருண ஜபம் காரணமாக நேற்று சங்கராபுரம் பகுதியில் ஓரு மணி நேரம் இடியுடன் கூடிய கன மழை பெய்தது குறிப்பிடதக்கது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X