| 'டிக்டாக்' ஆப் தவறாக பயன்படுத்தினால்கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை Dinamalar
'டிக்டாக்' ஆப் தவறாக பயன்படுத்தினால்கடும் நடவடிக்கை: எஸ்.பி., எச்சரிக்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
02:05

விழுப்புரம்:'டிக்டாக்' ஆப்பை தவறான நோக்கில் செயல்படுத்தி, வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


சாதி, மதம் ரீதியாக பிற சமூகத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில், மதம், சாதி சம்பந்தமாக அவதுாறாக 'டிக்டாக்' செயலி மூலம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தால், சட்டரீதியான நடவடிக்கைக்கு உட்படுத்துவதோடு, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகளை ஜனநாயக ரீதியாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். இது போல் பிற சாதி, மதத்தை விமர்சித்து வன்முறையை துாண்டும் விதத்திலும், தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களை விமர்சனம் செய்து வீடியோ பதிவிடுதல், மனதை புன்படுத்தும் வாசகங்களை பதிவு செய்யக் கூடாது.பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சமூக வலைதளங்களை நல்ல நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் சட்டம், ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில், இருவேறு சமூகத்தினரிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X