திரும்பி பார்க்க வைக்கும் திருப்பூர்! ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
02:09

இந்த நிதியாண்டில், திருப்பூர் ரூ.30 ஆயிரம் கோடி பின்னலாடை ஏற்றுமதி செய்யும்' என்று ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி, ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி என்ற சாதனை சாத்தியமானதுதானா என்ற விவாதம் எழுந்துள்ளது.நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மதிப்பு, 2017-----18-ம் நிதியாண்டில், 1.07 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2018-19-ல்,இது 4.7 சதவீதம் வளர்ச்சியடைந்து,


1.12 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது.திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியின் மதிப்பு, 2017-18ல் ரூ.24 ஆயிரம் கோடியாக இருந்தது. 2018-19ல் 8.3 சதவீத வளர்ச்சியடைந்து, ரூ.26 ஆயிரம் கோடியாக அதிகரித்தது. கடந்த ஆண்டு கடைசி ஆறு மாத ஏற்றுமதி, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 31.5 சதவீதம் அதிகரித்துள்ளது.திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறுகையில், '2020ம் ஆண்டு ரூ.1 லட்சம் கோடியை வர்த்தக இலக்காக நிர்ணயித்து, பின்னலாடைத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தோம். ஜி.எஸ்.டி., அமல் உள்ளிட்டவை காரணமாக, தொழில் சிறிது தொய்வைச் சந்தித்தது. ஜி.எஸ்.டி.,க்குள் வராத உள்ளடங்கிய வரிகள்(ஆர்.ஓ.எஸ்.எல்.,) உள்ளிட்ட சலுகைகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.


ஆர்.ஓ.எஸ்.எல்., 1.7 சதவீதத்தை அரசு திருப்பிக் கொடுத்துள்ளது. இந்த சதவீதத்தை சிறப்பு ஆடைகளுக்கு 6.2 சதவீதமும், சாதாரண, 'டி- சர்ட்'களுக்கு 4.9 சதவீதமும் அதிகரித்துள்ளது. இவற்றால், பின்னலாடைத் தொழில்துறை எழுச்சியைச் சந்தித்து வருகிறது. வரும் 2019-20ம் நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி ரூ.30 ஆயிரம் கோடியை எட்டும்,' என்றார்.சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக(ஏ.இ.பி.சி.,) துணைத்தலைவர் சக்திவேல், 'ஐரோப்பிய நாடுகளில் இந்திய பின்னலாடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கோடை, குளிர் ஆகிய காலங்களுக்கு ஏற்ப திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் ஆடை தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர்.மக்களின் ரசனைகளுக்கு ஏற்ப ஆடை வடிவமைப்பில் மாற்றம் செய்து புதிய ஆடைத் தயாரிப்பில் ஏற்றுமதியாளர்கள் ஈடுபடவேண்டும்.


மக்கள் விரும்பும் ஆடைகளை உற்பத்தி செய்து உலக வர்த்தக சந்தையில் விளம்பரப்படுத்த வேண்டும். அப்போது தான் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. ஆர்.ஓ.எஸ்.எல்.,, டியூட்டி டிராபேக்,. இ.பி.சி.ஜி., சலுகைகள் காரணமாக, இந்த நிதியாண்டில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு பின்னலாடைகளை ஏற்றுமதி செய்ய முடியும்' என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.இமாலய இலக்கு சாத்தியமா?பின்னலாடை ஏற்றுமதியில் துவக்கத்தில் ஆண்டுக்கு, 100 கோடி ரூபாயை எட்டுவதே, திருப்பூருக்கு சிரமமாக இருந்தது. படிப்படியாக முன்னேறி, தற்போது, 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பின்னலாடைத் தொழிலில் அடைந்த சாதனையே, திருப்பூர், உலக வரைபடத்தில் இடம்பெற காரணமாக அமைந்தது. 2020க்குள், ஒரு லட்சம்கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தபோதும், அதை எட்டுவதற்கு இன்னும் தொலைவு அதிகம். பல்வேறு தடைகளைக் கடந்துதான், ஏற்றுமதியாளர்கள் தற்போதைய சாதனை அளவை எட்டியுள்ளனர்.


ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதியை எட்ட முடியுமா என்பது குறித்து ஏற்றுமதியாளர்கள் விவாதித்து வருகின்றனர். சர்வதேசப் போட்டி கடுமையாக உள்ள நிலையில், அந்தச் சவாலில் வெற்றிபெற்றுத் தான் ஆர்டர்களை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது.ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி என்பது, மிகையாகத் தோன்றினாலும், எதிர்காலத்தில் சாத்தியமாகக்கூடியதே. அரசின் ஒத்துழைப்பு, ஏற்றுமதியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு மூலம், இதை எட்டுவது எளிதுதான்' என்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X