போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
04:20

வாலிபரை வெட்டி பணம் பறிப்புவேளச்சேரி: வேளச்சேரி, அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர், அசோக், 32; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பெருங்குடி ரயில் நிலையத்தில் இருந்து, வீட்டிற்கு நடந்து சென்ற போது, ஆட்டோவில் வந்த இருவர், அசோக்கை தலையில் கத்தியால் வெட்டினர்.அவர் நிலைகுலைந்து கீழே விழுந்ததும், 5,000 ரூபாய் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை பறித்து தப்பினர். காயம் அடைந்த அசோக், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.வாகனங்களை சேதப்படுத்தியவன் கைது ஐஸ் ஹவுஸ்: ராயப்பேட்டை, சைவ முத்தையா தெருவைச் சேர்ந்தவர், வரதராஜ், 54; ஆட்டோ ஓட்டுனர். இவரது ஆட்டோவை, 20ம் தேதி நள்ளிரவு, மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். அருகே நிறுத்தப்பட்டிருந்த, மூன்று இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஐஸ்ஹவுஸ் போலீசாரின் விசாரணையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த, குபேந்திரன், 19, என்பவன், கஞ்சா போதையில் சேதப்படுத்தியது தெரிய வந்தது.



நேற்று அவன் கைது செய்யப்பட்டான்.ரவுடியை வெட்டிய ஐந்து பேர் கைதுஎண்ணுார்: எர்ணாவூர், சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவன், பாண்டி, 33; பிரபல ரவுடி. இவன் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள், நிலுவையில் உள்ளன. 13ம் தேதி அதிகாலை, வீட்டில் உறங்கியவனை, 6 பேர் கும்பல், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி தப்பியது. எண்ணுார் போலீசாரின் விசாரணையில், பாண்டி, ரவுடி என்ற தோரணையில், அடிப்பது, பொருட்கள் வாங்கி வரச் சொல்லி மிரட்டியதால், ஆத்திரமடைந்தவர்கள், கத்தியால் வெட்டியது தெரிய வந்தது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த, கங்காதரன், 24, அருண்ராஜ், 24, பூபதி, 20, ராஜா, 22, பிரபாகரன், 19, உள்ளிட்ட ஐந்து பேரை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்தனர்.


மாணவனிடம் மொபைல் பறிப்புகோயம்பேடு: நாகர்கோவிலைச் சேர்ந்தவர், நிதின், 23; பொறியியல் மாணவர். நேற்று முன்தினம் இரவு, சொந்த ஊர் செல்வதற்காக, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.ஐஸ் வியாபாரியிடம் பணம் பறிப்புகோயம்பேடு: கோயம்பேடு, நெற்குன்றத்தைச் சேர்ந்தவர், இருதய நாராயணன், 45; குல்பி ஐஸ் வியாபாரி.


நேற்று முன்தினம் இரவு, சி.டி.என்.நகர், பிரதான சாலையில், ஐஸ் விற்பனையில் ஈடுபட்டிருந்த போது, மூன்று சிறுவர்கள், அவரை கல்லால் தாக்கி, 600 ரூபாயை பறித்து தப்பினர். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.ரவுடியை கொல்ல முயன்றவன்கள் கைதுகாசிமேடு: காசிமேடு, காசி கார்டனைச் சேர்ந்தவன்,கிளின்டன், 24; பிரபல ரவுடி. சமீபமாக, திருந்தி வாழ்ந்து வந்தான். தன் வீட்டருகே நின்றிருந்த கிளின்டனை, நேற்று மதியம் 3:00 மணிக்கு, மர்ம நபர்கள் இருவர், 'நீ திருந்தி வாழ்ந்து என்ன சாதிக்க போகிறாய்...' எனக் கேட்டு, அரிவாளால் வெட்ட முயன்றனர். காசிமேடு போலீசார், முன்விரோதம் காரணமாக, கொலை முயற்சியில் ஈடுபட்ட, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த காதர், 23, கொடுங்கையூரைச் சேர்ந்த நரேஷ், 19, ஆகியோரை கைது செய்தனர்.


'போக்சோ'வில் வாலிபன் கைதுஅயனாவரம்: அயனாவரம் காவல் நிலையத்தில், 19ம் தேதி, 17 வயது சிறுமியின் சகோதரி புகார் அளித்தார். அதில், 'அயனாவரம், மதுரை தெருவைச் சேர்ந்த, சூர்யா, 24, என்பவன், தன் தங்கையிடம் ஆசை வார்த்தைக் கூறி வெளியே அழைத்துச் சென்று, தகாத முறையில் நடந்துள்ளான். அவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.விசாரணையில், சம்பவம் உறுதியானதை அடுத்து, போலீசார், சூர்யாவை, 'போக்சோ' சட்டத்தில், நேற்று காலை கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X