கொலை, தற்கொலை, பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
04:21

மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலைபூந்தமல்லி: குன்றத்துாரைச் சேர்ந்தவர், பூங்காவனம், 30; மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி மேகலா. தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான பூங்காவனம், வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.வழக்கம் போல், நேற்று முன்தினமும் வேலைக்கு செல்லாததால், மேகலா கண்டித்தார். இதில் ஏற்பட்ட தகராறில், விஷம் குடித்த பூங்காவனம், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.


குன்றத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்தில் மளிகை வியாபாரி பலி பாண்டி பஜார்: ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்தவர், சுயம்பு துரை, 65; மளிகை வியாபாரி. நேற்று முன்தினம் காலை, கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து, கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி, இருசக்கர வாகனத்தில், வடபழனி, 100 அடி சாலையில் வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார். ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் , இரவு உயிரிழந்தார்.


பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.குடியை விட முடியாதவர் தற்கொலை பள்ளிக்கரணை: சித்தாலப்பாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் நந்தகுமார், 23; தச்சர். மது போதைக்கு அடிமையானவர், வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து வந்தார். குடியை மறக்க, மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று, சமீபத்தில் வீடு திரும்பியவர், மீண்டும் குடிக்க ஆரம்பித்துள்ளார்.குடியை விட முடியாத விரக்தியில், நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.


ரயிலில் அடிபட்டு ஊழியர் பலிஆவடி: அண்ணனுார் ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர், முருகன், 45; ரயில்வே ஊழியர். அவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். முருகன் நேற்று மாலை, 4:00 மணிக்கு, உணவு விடுதியில் இருந்து, பணிமனைக்கு செல்ல, இருப்பு பாதையை கடந்த போது, சென்னை - பெங்களூரு விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X