| வெயில் தாக்கம் தடுக்கும் கற்றாழை, 'ஜூஸ்' Dinamalar
வெயில் தாக்கம் தடுக்கும் கற்றாழை, 'ஜூஸ்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
04:45

மாதவரம் : கோடை கால வெப்பத்தால், உடல் நலத்தை பாதிக்கும் நோய்களை தீர்க்கவும், உடலுக்கு குளிர்ச்சி அளிக்கவும், தாவர உணவுப்பொருளாக, கற்றாழை பெரிதும் உதவுகிறது. நாளுக்கு நாள், கோடையின் தாக்கம் அதிகமாகியபடி வருவதால், இளநீர், நுங்கு, வெள்ளரி உள்ளிட்ட குளிர்ச்சியான பொருட்களுக்கு, வரவேற்பு அதிகரித்துள்ளது.அந்த வகையில், இன்று, கற்றாழை ஜூஸ், பலரால் விரும்பி உட்கொள்ளப்படுகிறது.கற்றாழையின் மேல் தோலை அகற்றி, உள்ளிருக்கும், 'ஜெல்' எனப்படும், கண்ணாடி துண்டுகள் போன்ற பசையை, மிக்சியில் அரைத்து, அதனுடன், தயிர், மோர் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.


அதன் கசப்பு தன்மையை குறைக்கும் வகையில், தயிர், மோர் சேர்க்கப்படுகிறது. மாதவரம், அம்பத்துார், செங்குன்றம் உள்ளிட்ட புறநகர்களில், அரை லிட்டர் ஜூஸ், 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலையில், பலரும், கோடை நோய்களின் பாதிப்பை தவிர்க்க, கற்றாழையை விரும்பி உட்கொள்கின்றனர். கற்றாழை பசை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து, தலைக்கும் பயன்படுத்தப்படுகிறது.மேலும், அதை முகத்தில் தடவி, 20 நிமிடங்களுக்கு பின், முகம் கழுவினால், உடல் குளிர்ச்சியும், முகப்பொலிவும் கிடைப்பதாக, பயன்படுத்துவோர் கூறுகின்றனர்.



பெரிய கடைகளில், தினமும், 150 கிலோ கற்றாழை அரைக்கப்பட்டு, 70 லிட்டர் ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. கோவை, மதுரை, தேனி, கம்பம் சுற்றுவட்டாரங்களில் இருந்து, கற்றாழை இறக்குமதி செய்யப்படுகிறது.ஜூஸ் கடை வியாபாரிகளால், 1 கிலோ, 30 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஒரு கிளையில், 3 - 4 கிலோ கற்றாழை உள்ளது. ஒவ்வொரு வியாபாரியும், 50 - 300 கிலோ வரை வாங்குகின்றனர்.கற்றாழை ஜூஸ், கோடை காலத்தில், உடல் நலத்தை காக்கிறது. சர்க்கரை நோய் மற்றும் மஞ்சள் காமாலை, மூலம் உள்ளிட்ட வெப்ப நோய்களை, கற்றாழை குணமாக்குகிறது.கே.லட்சுமணன்,ஜூஸ் வியாபாரி, மாதவரம் பால்பண்ணை

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X