தணியுமா... துாங்கா நகரை துரத்தும் நீங்கா தாகம் .. கோடை காலத்தில் இது வாடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஏப்
2019
07:14
பதிவு செய்த நாள்
ஏப் 23,2019 07:08

மதுரை : வழக்கம் போல இந்த கோடையிலும் நீங்கா தாகம் துாங்கா நகரை புரட்டி எடுக்க துவங்கிவிட்டது. தட்டுப்பாடு இன்றி சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தொகை 20 லட்சத்தை கடந்துவிட்டது. இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் வைகை, முல்லைப்பெரியாறு அணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனாலும் புதிய குடிநீர் திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததால், மக்களின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய மாநகராட்சி நிர்வாகத்தால் முடியவில்லை.


அதிலும் கோடை காலங்களில் தட்டுப்பாடு அதிகரித்து விடுகிறது. அதற்கு இந்த கோடையும் தப்பவில்லை. வழக்கமாக வைகை அணையில் இருந்து தினமும் 115 எம்.எல்.டி., (ஒரு எம்.எல்.டி., என்பது நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டர்), வைகையாற்று படுகையில் 25, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 11, போர்வெல்கள் மூலம் 10 எம்.எல்.டி., குடிநீர் பெறப்பட்டு வந்தது.

அதலபாதாளத்தில் நிலத்தடிநீர் ஆனால் கொளுத்தும் கோடை வெயில், போதிய மழையின்மையால் நீர் ஆதாரங்கள் வற்றத்துவங்கின.


வைகை ஆறும் வறண்டது. இதனால் ஆற்றுப்படுகையில் இருந்து பெறப்பட்ட குடிநீர் அளவு வெகுவாக குறைந்தது. அதுமட்டுமின்றி மதுரை நகரில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் போர்வெல்கள் வெறுமையாக உள்ளன. இக்காரணங்களால் வழக்கமாக கிடைத்த குடிநீர் அளவில் 20 எம்.எல்.டி., வரை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே குடிநீர் வினியோகம் பாதித்துள்ளது.


தட்டுப்பாட்டால் மக்கள் தவிப்பு

குறிப்பாக கடந்த 2011ம் ஆண்டு மதுரையுடன் இணைக்கப்பட்ட 11 கிராம ஊராட்சிகள், அவனியாபுரம், திருநகர், விளாங்குடி பேரூராட்சிகள் உட்பட 17 உள்ளாட்சி பகுதி மக்களுக்கு கோடையில் போதிய குடிநீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே போல பெத்தானியாபுரம், மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு உள்ளிட்ட வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இப்பகுதிகளில் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதில்லை. நான்கு நாட்கள் முதல் ஒரு வாரம் வரை குடிநீருக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவும் குறுகியே நேரமே தண்ணீர் விடப்படுகிறது.



லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பஆங்காங்கே அமைக்கப்பட்ட சிறிய குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாகிவிட்டன. அங்கு தண்ணீர் நிரப்புவதை மாநகராட்சி நிர்வாகம் மறந்து பல மாதங்களால் ஆகின்றன. தற்போது மதுரையில் தலைதுாக்கி இருக்கும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் பரிதவிக்க துவங்கி உள்ளனர். குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தட்டுப்பாட்டை போக்கி சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தண்ணீர் கிடைக்கும்

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சில வார்டுகளில் தட்டுப்பாடு உள்ளது. மேடான பகுதிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்வதில் சில சிரமங்கள் உள்ளன. தற்போது கள்ளழகர் ஆற்றில் இறங்குவதற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், வைகை ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்ட போர்வெல், கிணறுகளுக்கு கூடுதல் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து முழுமையாக 25 எம்.எல்.டி., நீர் தற்போது கிடைக்கிறது.


இதே போல முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், அணைக்கு கூடுதல் நீர் வருகிறது. எனவே கோடையில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. கோடை முடிந்ததும் கேரளாவில் தென்மேற்கு மழை துவங்கி நமக்கு தண்ணீர் கிடைத்துவிடும்,

என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X