சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
08:18

இடைப்பாடி: சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று மழை பெய்தது.


கொங்கணாபுரத்தில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. கொங்கணாபுரத்தில் இருந்து சேலம் மெயின்சாலை பகுதியில் கன்னந்தேரி அருகே, ஒண்டிபனை பகுதியில் புளியமரம் உடைந்து, சாலையில் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நேற்று மாலை அரைமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைபட்டது. அதேபோல் அருகில் உள்ள பகுதியில், மின்கம்பம் சாயந்ததால் மின்சாரம் தடைபட்டது. சாலையில் விழுந்த மரத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அகற்றியதால், அரைமணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.


* வாழப்பாடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில், வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில் நேற்று மதியம், 2:00 மணியளவில் திடீரென பலத்த காற்று வீசியது. பின், 2:10 மணியளவில் மழை பெய்ய துவங்கி, 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது. இதனால், வெப்பம் தணிந்து, பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவிற்குட்பட்ட, கல்வராயன் மலையில், கருமந்துறை, பகுடுப்பட்டு, மணியார்குண்டம், சூலாங்குறிச்சி ஆகிய பகுதிகளில் மழை வருமென எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.


* நேற்று இரவு, 8:00 மணிக்கு சங்ககிரியில் திடீரென மழை பெய்யத்தொடங்கி, ஒரு மணி நேரம் கொட்டியது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகனங்கள் சாலையில் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். மழையால், சங்ககிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குளம், குட்டைகள் ஓரளவு நிரம்பின. மேலும், இரண்டு மணிநேரம் மின்சாரம் பாதிக்கப்பட்டது.


* நேற்று மாலை பலத்த காற்று வீசிய நிலையில், தலைவாசல், பட்டுத்துறை, தேவியாக்குறிச்சி, மும்முடி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், அரை மணி நேரத்திற்கும் மேலாக, இடி-மின்னலுடன் மழை பெய்தது. வயல்வெளிகள், சாலையோரங்களில், மழைநீர் தேங்கி நின்றதுடன், குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது. மழைப்பொழிவால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


* ஆட்டையாம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், வேலநத்தம் பாவடியில் தூர் வாரி ஆழப்படுத்திய பொது கிணற்றில், 15 அடிக்கும் மேல் தண்ணீர் நிரம்பியது. நேற்று காலை முதல், மீண்டும் வெயிலில் மக்கள் தவித்து வந்த நிலையில், மாலை, 4:30 மணிக்கு லேசாக துவங்கிய சாரல் மழை, அரை மணி நேரம் நீடித்து, குளிர்ச்சியான இதமான சூழல் நிலவியதால் மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


* ஆத்தூர், 18வது வார்டு காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று, இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தபோது, நீரோடையில் மழை நீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதியில் உள்ள, 50 வீடுகளில் புகுந்தது. பல வீடுகள் பாதியளவு நீரில் மூழ்கி உள்ளன. பாதிப்புக்கு உள்ளானவர்கள், அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.


ஆத்தூர் பகுதியில் ஆலங்கட்டி மழை: ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கோடை வெயில் வாட்டி வதைத்தது. விளை நிலங்களில் புற்கள் கூட காய்ந்து கருகியதால், கால்நடைகளுக்கு தீவனம் இல்லாமலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் குடிநீர் பிரச்னை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆத்தூர், நரசிங்கபுரம், கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று மாலை, 5:30 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்ய துவங்கியது. மாலை, 6:30 மணியளவில் சூறைக்காற்று, இடி, மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆத்தூர் பகுதி மக்கள், மழையில் நனைந்தபடி ஆலங்கட்டிகளை சேகரித்தனர். மாலை, 7:30 மணி வரை மழை நீடித்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடை மழையால், வெயிலின் தாக்கம் குறைந்தது. இடி, மின்னல் மழையால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X