அரசு மருத்துவமனை முன் சாலையில் குழந்தை பெற்றெடுத்த இளம் பெண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
08:18

ஆத்தூர்: ஆத்தூர் அரசு மருத்துவமனை முன், சரக்கு வேனில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, சாலையில் குழந்தை பிறந்தது.


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சங்கர், 30. இவரது மனைவி ரேவதி, 23. இவர்களுக்கு, ஐந்து வயதில் ஒரு மகன், நான்கு வயதில் ஒரு மகள் உள்ளனர். ரேவதி, மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இவர், நேற்று விழுப்புரத்திலிருந்து, நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டைக்கு கூலி வேலைக்கு செல்ல, 'பொலிரோ - பிக்கப்' சரக்கு வேனில், கணவர், குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தார். மதியம், 3:40 மணியளவில் ஆத்தூர் அரசு மருத்துவமனை முன் உள்ள பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது, ரேவதிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், டிரைவர் வாகனத்தை நிறுத்தினார். கீழே இறங்கியதும், சாலையிலேயே அந்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. தகவலறிந்த அரசு மருத்துவமனை பணியாளர்கள், 'ஸ்டிரெச்சர்' கொண்டு வந்து தாய், குழந்தையை மகப்பேறு பிரிவுக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து, ரேவதி கணவர் சங்கர் கூறுகையில், ''வரும், 27ல், குழந்தை பிறக்கும் என, மருத்துவர்கள் கூறினர். நாமகிரிப்பேட்டையில் கூலி வேலைக்கு சென்று, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பார்க்கலாம் என்றிருந்தோம். வேனில் செல்லும்போது வலி ஏற்பட்டு, சில நிமிடத்தில் குழந்தையும் பிறந்துவிட்டது,'' என்றார். ஆத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் கண்ணன் கூறுகையில், ''சரக்கு வேனிலிருந்து கீழே இறங்கியதும் இளம் பெண், சாலையில் குழந்தை பெற்ற தகவல் கிடைத்தது. உடனே சென்று, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம். பெண் குழந்தை, 2.500 கிலோ எடை உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர்,'' என்றார்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X