| செல்ல பிராணிகளுக்கு நவீனமுறை அறுவை சிகிச்சை: மேலும் 10 மாவட்டங்களில் விரைவில் துவக்கம் Dinamalar
செல்ல பிராணிகளுக்கு நவீனமுறை அறுவை சிகிச்சை: மேலும் 10 மாவட்டங்களில் விரைவில் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
08:19

சேலம்: தமிழகத்தில், மேலும், 10 மாவட்டங்களில் செல்ல பிராணிகளுக்கு, நவீனமுறை அறுவை சிகிச்சை விரைவில் துவங்க உள்ளது.


சேலத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில், பன்முக மருத்துவமனை உள்ளது. இங்கு, வீட்டு செல்ல பிராணிகளுக்கு, காஸ் மூலம் மயக்க மருந்து செலுத்தி, அறுவை சிகிச்சை செய்யும் பணி, முதல் முறையாக நேற்று துவங்கப்பட்டது. அதற்காக, 4.2 லட்ச ரூபாய் மதிப்பில், 'சேவோப்ளூரேன்' வாயு மயக்க மருந்து செலுத்தும் கருவி, நிழல் மின்விளக்கு கருவிகளுடன் கூடிய பிரத்யேக அறுவை சிகிச்சை கூடம் நிறுவப்பட்டு, ரோசி என்ற வீட்டு செல்ல நாய்க்கு அறுவை சிகிச்சை நடந்தது. மூத்த மருத்துவர் ராஜேந்திரன் தலைமையில், உதவி இயக்குனர் தேவேந்திரன் மற்றும் அய்யாசாமி, வாசுதேவன், விஜயவிஷ்ணு, விக்னேஷ், ஆனந்தராஜ், மயக்கவியல் நிபுணர் விக்னேஷ்வரன் கொண்ட குழுவினர், கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். அதன்பின், ரோசிக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு, 15 நிமிடத்துக்குள் அது சுயநினைவுக்கு திரும்பி, இயல்பு நிலையை அடைந்தது. மருத்துவர்கள் கூறியதாவது: திருப்பூர், தஞ்சை, ஈரோடு, வேலூர், தூத்துக்குடி, கோவை, நெல்லை உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் விரைவில், நவீனமுறை அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X