தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு: நடப்பு கல்வியாண்டில் கெடுபிடிகள் அமல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
09:46

தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையில், பல்வேறு கெடுபிடிகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்விச்சட்டம், தமிழகத்தில், 2010ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், ஏழைக்குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளின் முதல் நுழைவு வகுப்புகளில், 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை, தமிழக அரசு செலுத்துகிறது. இந்த ஒதுக்கீட்டில், குழந்தைகளை சேர்க்க விரும்புவோருக்கு, நேற்று முதல் விண்ணப்ப பதிவு, ஆன்லைனில் துவங்கியது. நான்கு வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்கு, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் உள்ள பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்க்க விரும்பும் பெற்றோர், குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், குடும்ப வருமான சான்றிதழ், பெற்றோரின் ஆதார், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவைகளை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தால், அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதை தடுக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டில் சில கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில், 3 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நடப்பு கல்வியாண்டில், இருப்பிடத்திலிருந்து, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள், பள்ளி அமைந்திருக்க வேண்டும். மேலும், எல்.கே.ஜி., க்கு விண்ணப்பிக்கும் குழந்தைக்கு, நான்கு வயதுக்குள் இருக்க வேண்டும். இதனால், நடப்பு கல்வியாண்டில், இந்த இட ஒதுக்கீட்டில், தனியார் பள்ளிகளில் சேர்க்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X