சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் காமுகர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
09:46

தமிழகத்தில், ஏப்ரலில் மட்டும் சிறுமியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 355 காமுகர்களை போலீசார், 'போக்சோ'வில் கைது செய்துள்ளனர்.


தமிழகத்தில், 18 வயதுக்கு குறைவான சிறுமியர் பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், பாதிப்பு ஏற்படுத்தியவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்கின்றனர். ஏப்ரலில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு, வெளியேறும் சிறுமியர், காமுகர்களின் பார்வையில் சிக்கி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகின்றனர். சேலம் மாநகரில், மூன்று அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், ஏப்.,1 துவங்கி நேற்று வரை, ஏழு பேரும், சேலம் மாவட்டத்தில், ஐந்து அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில், 13 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக போலீசின் குற்ற ஆவண காப்பக அதிகாரிகள் அளித்த தகவல்படி, மாநிலம் முழுவதும் உள்ள, 385 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் கடந்த மார்ச்சில், 175 பேர், !போக்சோ'வில் கைதாகி உள்ள நிலையில், ஏப்.,1 முதல், ஏப்.,21 வரை, 355 பேர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏப்ரலில் இரு மடங்காக அதிகரித்திருப்பது, போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத டி.எஸ்.பி.,க்கள் கூறியதாவது: 'போக்சோ' சட்டத்தில், அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் பெண் இன்ஸ்பெக்டர்களால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆண் இன்ஸ்பெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த பெண் காவலர், எஸ்.ஐ., ஆகியோரில் ஒருவர் கட்டாயம் உடன் இருக்க வேண்டும் என்ற விதியால், வழக்குப்பதிவு செய்வதை, ஆண் இன்ஸ்பெக்டர்கள் தவிர்ப்பதோடு, பெண் இன்ஸ்பெக்டர்களுக்கு புகாரை மாற்றி விடுகின்றனர். இச்சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களுக்கு, குறைந்த பட்சம் ஆறு மாதம் ஜாமின் கிடைக்காத வகையில் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். போலீஸ் பாணியில் கவனிப்பு செய்யப்படுவது இல்லாததால், காமுகர்கள் சிறை சென்று திரும்பியதும், மீண்டும் தங்கள் ஆட்டத்தை துவக்குகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள, அனைத்து சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும், ஆண் இன்ஸ்பெக்டர்கள், போக்சோவில் கைது நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே, சிறுமியரை குறி வைத்து பாலியல் தொல்லை கொடுக்கும் காமுகர்களை முழுமையாக ஒடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X