மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால்படகு பராமரிப்பு பணியில் மீனவர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
01:43

ராமநாதபுரம் : தமிழகம்,புதுச்சேரியில் மீன் பிடி தடைக்காலம் துவங்கியதால், விசைப்படகு மீனவர்கள் படகுகளை பராமரிப்பு செய்யும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.தமிழகம், புதுச்சேரியில் உள்ள வங்க கடல் பகுதியில் கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம், ஏப்.,15 முதல் துவங்கியது. மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கான காலம் 45 நாட்களாக இருந்தது. இது 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.


8,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரைகளில்ஏற்றி நிறுத்ததப்பட்டுள்ளது.இதில் துாத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில்உள்ள மீனவர்கள் மீன் பிடி துறைமுகப்பகுதியில் தங்களது விசைப்படகுகளை கரைகளில் ஏற்றி நிறுத்தி பழுது பார்த்தல், பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். வலைகளை சீரமைப்பு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தியுள்ளன..2 லட்சம் குடும்பத்தினர்:


விசைப்படகுகள் மீன் பிடி தொழில் செய்ய தடை உள்ளதால், இதனை நம்பி தொழில் செய்யும் 2 லட்சம் குடும்பத்தினர் தொழில் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைமுகமாக 5 லட்சம் தொழிலாளர்கள் பணி வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு தடைக்காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில் 1.70 லட்சம் மீனவ குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X