பரமக்குடி, ராமேஸ்வரத்தில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
01:45

பரமக்குடி : புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்தரையர் சமுதாய பெண்களை இழிவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதனை கண்டித்து ராமேஸ்வரம், பரமக்குடியில் பெண்கள் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பரமக்குடி தாலுகா பார்த்திபனூர் அருகே வழிமறிச்சான் கிராம மக்கள் இதனை கண்டித்து நேற்று திடீர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். பார்த்திபனூர், கமுதி ரோட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 250 பேர் துடைப்பம், மிதியடிகளுடன் ஒரு மணி நேரம் பஸ் மறியல் செய்தனர்.


அப்போது பெண்களை இழிவாக பேசிய மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. டி.எஸ்.பி., க்கள் சங்கர்(பரமக்குடி), சண்முகசுந்தரம்(கமுதி), பார்த்திபனூர் இன்ஸ்பெக்டர் பழனி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலைந்து சென்றனர். தொடர்ந்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவைடி.எஸ்.பி., சங்கரிடம் பெண்கள் வழங்கினர்.


ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நெடுஞ்சாலையில் முத்தரையர் சங்கத்தலைவர் சுந்தரராஜன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ரோடு மறியல் செய்தனர். முத்தரையர் இளைஞர் சங்கத்தினர், மகளிரணியினர் பங்கேற்றனர். பின் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முத்தரையர் இன பெண்களை தரக்குறைவாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரியும், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களிடம் டி.எஸ்.பி., மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தார். கமுதி அருகே காக்குடி, வலையமணக்குளம், சடையனேந்தல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர், ஒருங்கிணைப்பாளர் உதயசூரியன் தலைமையில் கமுதி தாலுகா அலுவலகத்தில், பெண்கள் குறித்து கருத்துக்கள் வெளியிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் கல்யாணசுந்தரம், டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் ஆகியோரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்து கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X