கண்மாயில் கலக்கும் கழிவுநீர்: காலியாகும் விவசாய நிலங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:08

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் வரத்து கால்வாய்கள் மூலம் கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் விஷமாக மாறி பாழடைந்து வருகின்றன. இதனால் விருதுநகரில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.மாவட்டத்தில் கண்மாய் பாசனம் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. லட்சக் கணக்கான குடும்பங்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்,சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, கொண்டக்கடலை, பாசிப்பயறு, உளுந்து, எள், வாழை, கரும்பு, பருத்தி, மிளகாய் போன்றவை பயிரிடப்படுகின்றன.


பெரும்பாலும் வரத்துகால்வாய்கள் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. தொழிற்சாலை ஆலைகள், குடியிருப்பு பகுதிகளில் இருந்து கடத்தப்படும் கழிவுநீர் குறித்து முறையான ஆய்வு இல்லாததாலும், அலட்சியத்தாலும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கிறது. இதுபோல் குடியிருப்பு பகுதிகளில் இருந்து தொடர்ச்சியாக வரும் குப்பை வரத்துக்கால்வாய்கள், ஊரணிகள் மற்றும் கண்மாய்களில் கொட்டப்பட்டு வருகின்றன. வரத்துக்கால்வாய்கள், கண்மாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் சாக்கடையாக மாறி வருகிறது.


தொழிற்சாலை ஆலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாய்களில் சேர்ந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல்வேறு மாசு கலந்திருப்பதால் விஷமாக மாறிய தண்ணீரால் விவசாயப் பயிர்கள் கருகி வருகின்றன. கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதால் சுற்றுப்பகுதி விவசாய கிணறுகளை மாசுப்படுத்தி விவசாயத்திற்கு ஆதாரமான தண்ணீருக்கும் வேட்டு வைக்கிறது. தொடர்ந்து கண்மாய்களில் கழிவுநீர் கலப்பதால் விவசாய நிலங்கள் பயன்பாடு இன்றி தரிசு நிலங்களாக, விலைநிலங்களாக மாறி வருகின்றன.


வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்தில் முழுக்க மழையை நம்பியே விவசாயம் உள்ளது. விருதுநகரில் அவ்வபோது பெய்யும் குறைந்தளவு மழைநீரும் கழிவுநீரோடு சேர்ந்து சாக்கடை நீராக மாறி வருகிறது. இதனால் வறட்சி தாண்டவமாடி விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கின்றனர். மழைநீர் கெடுவதால் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனமும் கைகொடுக்காமல் விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். கண்மாய்கள், வரத்துக்கால்வாய்கள் என அனைத்து வகை நீர் தேக்கங்களிலும் கருவேலம் , புதர்செடிகள், பிளாஸ்டிக் குப்பை நிரம்பி உள்ளதால் மழைநீர் தேங்க வழியின்றி நிலத்தடி நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.


விவசாயத்தை பெருக்கும் வகையில் கண்மாய்களை கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழிப்புணர்வும் இல்லை மாவட்டத்திற்கு கிடைக்கின்ற மழைநீரை முறையாக விவசாயத்திற்கு பயன்படுத்த வரத்துக் கால்வாய்கள் மூலம் கடத்தப்படும் கழிவுநீரை, கண்மாய்கள் , ஊரணிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கலப்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தடுக்க வேண்டும்.


விவசாயிகளிடம் கழிவுநீர் கண்மாய்களில் கலப்பதால் விவசாய உற்பத்தி குறையும் என்ற விழிப்புணர்வு இல்லை. இப்படியே கழிவுநீர் கலந்தால் ஏக்கருக்கு 40 மூடை நெல் கிடைக்க வேண்டிய இடத்தில், 20 மூடை தான் கிடைக்கும் சூழ்நிலை ஏற்படும்.- விஜயமுருகன், மாவட்டத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விருதுநகர்

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X