கண்மாய்கரையில் மீண்டும் வாகனங்கள்: தொடர்கிறது போக்குவரத்திற்கு இடையூறு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:09

சிவகாசி : சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் மீண்டும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு விபத்திற்கும் வழி ஏற்படுகிறது.சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை, கார்னேசன் பகுதி திருத்தங்கல் ரோட்டில் கனரக வாகனங்களை நிறுத்தியதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதோடு விபத்துக்கும் வழி வகுத்தது.சிவகாசி சிறுகுளம் கண்மாய் கரை அருகே வீடுகள் மற்றும் கடைகள் அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.


நீதிமன்ற உத்தரவின்படி கரை பகுதி வீடுகள் மற்றும் கடைகள் அகற்றப்பட்டன. இதன் பின்னர் இந்த இடத்தில் நடமாடும் கடைகள் முளைத்தன. இவைகள் மீண்டும் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நகருக்கு சரக்குகள் ஏற்றி வந்த கனரக வாகனங்கள் அனைத்தும் கண்மாய் கரையில் உள்ள திருத்தங்கல் ரோட்டில் நிறுத்தப்பட்டது. ஒரே நேரத்தில் 50 க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கல்லுாரி பஸ்கள் மற்றும் நகர் பஸ்கள் கடப்பதற்கு பெரிதும் சிரமப்பட்டன. டூ வீலரில் செல்பவர்கள் அச்சத்துடனே செல்ல வேண்டியிருந்தது.


இதைதொடர்ந்து இப்பகுதியில் போலீசார் சார்பில் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. தடுப்பு ஏற்படுத்தும் வகையில் 'பேரி கார்டும்' வைக்கப்பட்டிருந்தது.ஆனால் அறிவிப்புப் பலகையை பொருட்டாகவே மதிக்காது சரக்கு வானங்களை தொடர்ந்து நிறுத்தி வந்தனர்.இதுதொடர்பாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாக போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அறிவிப்பு பலகை ,பேரிகார்டினை தொடர்ந்து 200 மீட்டர் துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தப்படாத அளவிற்கு தடுப்பு கம்பியினை கட்டியிருந்தனர். ஒரு சில வாரங்களே இந்நிலை தொடர்ந்தது.


தற்போது மீண்டும் கனரக வாகனங்கள் நிறுதப்பட்டு வருகிறது. தடுப்பு கம்பிகள், பேரிகார்டு போன்றவற்றை காணவில்லை. நோ பார்க்கிங் அறிவிப்பு பலகையையும் கண்டுகொள்ளாமல் வாகனங்களை நிறுத்துவது தொடர்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் செய்ய போலீசார் நடவடிக்கையை தொடர வேண்டும்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X