மதுரை சிறையில் கைதிகள் 2 மணி நேரம் ரகளை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2019
02:30

மதுரை : மதுரை மத்திய சிறையில் அதிகாரிகள் அவமானப்படுத்துவதாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட கைதிகள் மாடியில் ஏறி கற்களை பெயர்த்து வீசி ரகளை செய்தனர். இதனால் புதுஜெயில் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.இச்சிறையில் ஆயிரத்து 297 கைதிகள் உள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டோர் விசாரணை கைதிகள். இவர்களில் சிலர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திரும்ப அழைத்து வரப்படுவர். சில கைதிகள் நீதிமன்றத்திற்கு சென்று திரும்பும் போது, உடலில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து எடுத்து வருவர். சிறை அதிகாரிகள் அவர்களை சோதனையிட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் இல்லாததை உறுதிப்படுத்திய பின் சிறையில் அடைப்பர்.



நேற்று இதுபோல நீதிமன்றத்திற்கு சென்று திரும்பிய கைதிகளை சோதனையிட்டனர். இதை கண்டித்து நேற்று பகல் 3:30 மணிக்கு 50 க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் 2,3வது பிளாக் மாடிகளில் ஏறி, வெளியில் புது ஜெயில் ரோட்டை நோக்கி கற்களை வீசினர். சிலர் மாடி தட்டோடுகளை பெயர்த்து வீசினர். சாப்பாடு தட்டுகளை எறிந்தனர். மாடியிலிருந்த தொட்டிகளை உடைத்ததால் தண்ணீர் வீணானது. சில கைதிகள் கற்களால் நெஞ்சில் உரசி, ரத்தம் சொட்ட கோஷங்களை எழுப்பி கற்களை வெளியே வீசிய வண்ணம் இருந்தனர்.


இதையடுத்து புது ஜெயில் ரோடு வழியாக சென்ற வாகனங்கள், மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. அந்த ரோடு முழுவதும் கற்கள் சிதறிக் கிடந்தன. இடையில் மரங்கள் இருந்ததால் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.மாடியில் நின்ற கைதிகள், 'கஞ்சா சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அவமானப்படுத்துகின்றனர். சித்ரவதை செய்கின்றனர். சாப்பாடு முறையாக வழங்குவதில்லை. கேட்டால் தாக்குகின்றனர். கலெக்டர் நேரில் வந்து விசாரிக்க வேண்டும்' என கோஷங்களை எழுப்பினர்.அதையடுத்து சிறையில் அபாய சங்கு ஒலிக்கப்பட்டது. கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் சிறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.


போலீஸ் உதவி கமிஷனர்கள் உதயகுமார், ஆறுமுகம் தலைமையில் பட்டாலியன் போலீசாரும், மேற்கு தாசில்தார் கோபி தலைமையில் வருவாய்த்துறையினரும் குவிக்கப்பட்டனர்.பின் சிறை அதிகாரிகள் 2,3 ம் செல்களுக்கு சென்று கைதிகளுடன் பேசினர். 'நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வரும் அனைத்து கைதிகளையும் சோதனை செய்யக் கூடாது. சந்தேக நபர்களை மட்டுமே சோதனை செய்ய வேண்டும்.


கீழே இறங்கினால் அடிக்க கூடாது' என கைதிகள் தெரிவித்தனர்.'யாரையும் அடிக்க மாட்டோம்' என கண்காணிப்பாளர் தெரிவித்ததால் ஒவ்வொருவராக இறங்கினர். அதையடுத்து 'செல்களில்' கைதிகள் அடைக்கப்பட்டனர். கலவரத்தை துாண்டிய கைதிகள் யார் என சிறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X