அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவி ஊசலாடுகிறது: ஆக்சிஜன் கசிவை தடுக்க முடியாமல் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஏப்
2019
14:26
பதிவு செய்த நாள்
ஏப் 24,2019 03:16

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் உயிர் காக்கும் கருவி ஊசலாடுகிறது. அதில் ஏற்பட்டுள்ள கசிவை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இம்மருத்துவமனை மெயின் கட்டடத்தில் முக்கிய சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. மூவாயிரம் படுக்கை வசதி கொண்ட இங்கு 2500 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் திரவ நிலையில் இருந்து ஆக்சிஜன் வாயுவை சப்ளை செய்யும் நவீன இயந்திரம் பொருத்தப்பட்டது.



இந்த ராட்சத இயந்திரம் 13 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் இருந்து அனைத்து வார்டுகளுக்கும் பைப் லைன் மூலம் இணைப்பு வழங்கப்பட்டு, தேவைப்படும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. தினமும் நுாற்றுக் கணக்கானோரின் உயிரை காப்பாற்றும் இந்த இயந்திரத்தின் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. பைப்லைனின் பல இடங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் திறந்த 'வால்வு'களை சரியாக மூடுவதில்லை.


இதனால் வீணாகும் ஆக்சிஜன் அளவு அதிகரித்து, பெருமளவு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. கசிவு ஏற்படும் இடங்களை வல்லுநர்கள் மூலம் அடையாளம் கண்டு சரி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அழுத்தம் குறைவால் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கசிவு தொடர்வதால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே திரவ நிலை ஆக்சிஜன் முற்றிலும் குறைந்துவிடுகிறது. இதை தடுக்க மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
24-ஏப்-201906:31:45 IST Report Abuse
Manian அதை தடுக்க முடியுமா? அப்போ ஆகசிசன் எங்கே போகும்?
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
25-ஏப்-201908:11:14 IST Report Abuse
Manianஇப்படி பாதி தொடர்புகளை அறுத்த கருத்து கலை தேவையா? விஞ்ஞானம் கலந்த ஏளனத்தைகூடவா புரிந்து கொள்ள முடியவில்லை? தினமலர் வெட்க படவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஏப்-201905:48:02 IST Report Abuse
Mani . V எங்களுக்கு குட்கா விற்கவே நேரம் சரியாக இருக்கிறது. இதில் எங்கே அரசு மருத்துவமனையை கவனிப்பதாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X