| மீண்டும் ரவுடிகள் ராஜ்ஜியம்: கலக்கத்தில் புதுச்சேரி மக்கள் Dinamalar
மீண்டும் ரவுடிகள் ராஜ்ஜியம்: கலக்கத்தில் புதுச்சேரி மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
00:00

புதுச்சேரி:புதுச்சேரியில் கடந்த ஐந்து நாட்களில் மூன்று கொலைகள் நடந்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


லோக்சபா தேர்தல் கடந்த மார்ச் 10ம் தேதி அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நடத்தை அமலுக்கு வந்தது. அதனையொட்டி புதுச்சேரியில் தேர்தலை அமைதியாக நடத்திட மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. அதன்காரணமாக பல ரவுடிகள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டனர். மேலும், பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து, நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.இதன் காரணமாக கடந்த 18ம் தேதி தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி நடக்கிறது. அதுவரை தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும். ஆனால், தேர்தல் வரை அடக்கி வாசித்து வந்த ரவுடிகள், ஓட்டுப்பதிவு துவங்கியதும் தங்களது வழக்கமான பணிகளை துவக்கி விட்டனர்.இதன் காரணமாக வாலிபர், மர்ம நபர்களால் கழுத்தறுத்தும், முத்தியால்பேட்டை, வைத்திக்குப்பத்தில் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். நேற்று பட்டப்பகலில் நோனாங்குப்பத்தில் பைக்கில் சென்ற நாகராஜ் என்ற வாலிபரை மூன்று பைக்குகளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் நடு ரோட்டில் வழிமறித்து வெட்டி கொலை செய்துவிட்டு சர்வ சாதாரணமாக தப்பி சென்றது.அதேபோன்று மூன்று நாட்களுக்கு முன் புதுச்சேரி கோர்ட்டிற்கு வந்து சென்ற கடலுாரை சேர்ந்த ரவுடி அருள், அரியாங்குப்பம் பாலத்தில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து கொலை செய்ய முயன்றது. அருள் பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்ததில் எலும்பு முறிந்து படுகாயமடைந்தார்.இச்சம்பவங்கள் தேர்தல் வரை அமைதியாக இருந்த ரவுடிகள் தேர்தல் முடிந்த கையோடு, தங்களின் மாமூல் வாழ்க்கையை துவங்கியிருப்பது மக்களை அச்சமடைய செய்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X