புலனாய்வு தரத்தை மேம்படுத்துவதற்கு பரிந்துரைகள் அளிக்க ஐந்து பேர் குழு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
00:00

சென்னை குற்ற வழக்குகளில் புலனாய்வின் தரத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகள் அளிக்க ஓய்வு பெற்ற டி.ஜி.பி. உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

சென்னை திருச்செங்கோட்டில் நடந்த வழிப்பறி சம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

அடையாள அணிவகுப்பை உடனடியாக நடத்த போலீசார் நடவடிக்கை எடுக்காததால் வழக்கு விசாரணை அர்த்தமில்லாமல் போகிறது. சாட்சிகளால் ஒருவரை கூட அடையாளம் காட்ட முடியவில்லை. இதுபோன்ற பல வழக்குகளில் விசாரணையே அர்த்தமற்றதாகி விடுகிறது.

இதுபோல பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விபரங்கள் விசாரணை முடிந்து தீர்ப்பான வழக்குகள் பற்றிய விபரங்களை மாவட்ட வாரியாக பெற்று நான்கு வாரங்களில் டி.ஜி.பி. தாக்கல் செய்ய வேண்டும்.

போலீஸ் நடத்தும் புலன் விசாரணையின் தரம் குறைந்து விட்டது. பல வழக்குகளில் விடுதலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை

யை பார்த்தால் அது

தெரியும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:

மாவட்ட வாரியாக தகவல் அளிக்க டி.ஜி.பி. மற்றும் போலீஸ் அதிகாரிகள் குழு கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம்.பிரபாவதி ஆகியோர் எடுத்த முயற்சிகளுக்கு இந்த நீதிமன்றம் பாராட்டு தெரிவிக்கிறது. ௨௦௧௩ முதல் 2018 வரையிலான ஆறு ஆண்டுகளில் ௧௦௧௭ பேருக்கு ௧௦ ஆண்டுகள் வரை தண்டனை கிடைத்துள்ளது; ௧௮௯௨ பேர் விடுதலை ஆகி உள்ளனர்.

ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களைப் பொறுத்தவரை ௮௬௮ பேருக்கு தண்டனையும் ௧௫௫௮ பேர் விடுதலையும் ஆகி உள்ளனர். புலன் விசாரணையின் தரம் சரிந்து விட்டது. வழக்குப் பதிவு செய்து கைது செய்வதில் காட்டும் சுறுசுறுப்பு புலன் விசாரணையிலும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதிலும் இல்லை.

குற்றவாளிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை சீர்திருத்தி அவர்களின் மறுவாழ்வுக்கான நடைமுறையை ஏற்படுத்த வேண்டும். புலனாய்வின் தரத்தை மேம்படுத்த சிறந்த நடைமுறையையும் ஏற்படுத்த வேண்டும். இதற்கான பரிந்துரைகளை அமல்படுத்தி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

எனவே எட்டு வாரங்களில் பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜ் ஓய்வு பெற்ற எஸ்.பி. - வி.சித்தண்ணன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ 'பான்யன்' அமைப்பின் இயக்குனர் டாக்டர் கே.வி.கிஷோர் குமார் அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் எம்.சுதாகர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X