| சவுடாம்பிகா குழும பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை Dinamalar
சவுடாம்பிகா குழும பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
00:02

திருவெறும்பூர்:பிளஸ் 2 தேர்வில், பாடவாரியாக சதமடித்த 20 மாணவர்களையும், சிறப்பிடம் பெற்ற 350 மாணவர்களையும் சவுடாம்பிகா கல்விக் குழும சேர்மன் ராமமூர்த்தி, செயலர் செந்துார்செல்வன் வாழ்த்தி பாராட்டினர்.திருச்சி மாவட்டத்தில், சவுடாம்பிகா கல்விக் குழுமத்தைச் சேர்ந்த 7 பள்ளிகள் இயங்குகின்றன. இப்பள்ளிகளில் இருந்து, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர் ஆனந்தன் 587 மதிப்பெண், மாணவர் ஆனந்தராஜ் 585 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இயற்பியலில் ஒருவரும், உயிரியியல், வேதியியல்,மற்றும் கணிதம் பாடங்களில் தலா இரண்டு மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் இரு மாணவர்கள் 585; நான்கு மாணவர்கள் 580; 14 மாணவர்கள் 570; 59 மாணவர்கள் 550; 271 மாணவர்கள் 500க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர் ஆனந்தனுக்கு சவுடாம்பிகா கல்விக் குழுமச் சேர்மன் ராமமூர்த்தி, செயலர் செந்துார்செல்வன் பரிசு வழங்கி பாராட்டினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X