| மவுசு இல்லை! நான்-கிளினிக்கல் மருத்துவ படிப்பிற்கு...டாப் கியரில் ரேடியோ டைகனஷ் Dinamalar
மவுசு இல்லை! நான்-கிளினிக்கல் மருத்துவ படிப்பிற்கு...டாப் கியரில் ரேடியோ டைகனஷ்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
01:20

-எம்.டி., எம்.எஸ்., மருத்துவ மேற்படிப்பிற்கான இரண்டாம் கட்ட நேரடி கலந்தாய்வில் நான்-கிளினிக்கல் படிப்புகளை மருத்துவ மாணவர்கள் கண்டு கொள்ளாததால் அந்த இடங்கள் நிரப்பபடாமல் அப்படியே உள்ளன.


புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி, பிம்ஸ், வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர் உள்ளிட்ட நான்கு கல்லுாரிகளில் 181 எம்.டி., எம்.எஸ்., மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன.இதில், 84 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 253 பேரும், 85 மேலாண்மை இடங்களுக்கு 529 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு கடந்த 6ம் தேதி ஆன்-லைனில் கணினி கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்பட்டன. இடம் கிடைத்த மாணவர்கள் 12 ம்தேதிக்குள் சேர அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்ட கவுன்சிலிங் முடிவில் அரசு ஒதுக்கீட்டில் 70 இடங்களும், மேலாண்மை ஒதுக்கீட்டில் 47 இடங்களும் காலியாக இருந்தது. முதற்கட்ட கவுன்சிலிங் கணினி ஒதுக்கீடு முறையில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேரடி கலந்தாய்வாக புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.ரேடியோ டைகனஸ் டாப் மருத்துவ மேற்படிப்புகளை பொறுத்தவரை ேரடியோ டைகனஸ் படிப்பிற்கு மருத்துவ மாணவர்கள் முதல் சாய்ஸ் கொடுத்தனர். இதனால் தனியார் மருத்துவ கல்லுாரியில் இப்படிப்பு இடங்கள் உடனடியாக நிரம்பியது. ே


ரடியோ டைகனஸ் படித்தால் மருத்துவ துறையில் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இதன் காரணமாகவே இந்த துறையை தேர்ந்தெடுப்பதாக மருத்துவ மாணவர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்த இடங்களை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, தோல்நோய், மகப்பேறு, குழந்தை மருத்துவர், கண் டாக்டர், எலும்பு மருத்துவ படிப்புகள் பெற்றன. நான்-கிளினிக்கல்எம்.டி., படிப்புகளான அனடமி, பையோ கெமிஸ்ட்ரி, சமுதாய மருத்துவம், மைக்ரோ பையாலஜி, பேத்தாலஜி, பார்மகாலஜி, சைகாலஜி படிப்புகளை தேர்வு செய்ய மருத்துவ மாணவர்கள் தயக்கம் காட்டினர்.மகப்பேறு, காது மூக்கு, தொண்டை, குழந்தை மருத்துவம் உள்ளிட்ட கிளினிக்கல் படிப்புகளை படித்து முடித்த பிறகு நேரடியாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். ஆனால் நான் கிளினிக்கல் படிப்புகள் அப்படி இல்லை. மருத்துவ துறையில் பின்புலமாக இருந்து நோய்களை கண்டறிய கைகொடுக்க தான் முடியும். இதன் காரணமாக இப்படிப்புகளை மருத்துவ மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.


நான்-கிளினிக்கல் படிப்புகளை மருத்துவ மாணவர்கள் கண்டுக்கொள்ளாததால் அந்த இடங்கள் நிரப்பாமல் அப்படியே உள்ளன. ஏமாற்றம்புதுச்சேரி மாநிலத்தில் மூன்று தனியார் கல்லுாரிகளில் சேர்த்து 98 கிளினிக்கல் மருத்துவ மேற்படிப்புகள் உள்ளன. ஆனால் அரசு மருத்துவ கல்லுாரியில் ஒரு சீட் கூட கிளினிக்கல் படிப்பு இல்லை. இதனால் மருத்துவ மாணவர்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்தியா முழுவதுமே நோயாளிகளுடன் நேரடி தொடர்புடைய கிளினிக்கல் படிப்புகளுக்கு நல்ல மவுசு உள்ளது. இந்த படிப்புகளை புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் சுயநிதியாக ஆரம்பித்தால் கூட கடும் போட்டி இருக்கும். இதற்காக எந்த செலவும் செய்யாமல் ஏற்கனவே இருக்கும் மருத்துவ வசதிகளை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் அரசு மருத்துவ கல்லுாரி தன்னுடைய செலவிற்கு அரசினை எதிர்பார்க்காமல் நிதியை பெருக்கி கொள்ளவும் முடியும். கிளினிக்கல் படிப்புகளை அரசு மருத்துவ கல்லுாரியில் துவங்க வேண்டும் என்பதே மருத்துவ மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


-நமது நிருபர் ---

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X