| அன்னை புதுச்சேரி வருகை தினம் அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம் Dinamalar
அன்னை புதுச்சேரி வருகை தினம் அரவிந்தர் அறையில் பக்தர்கள் தரிசனம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
01:21

புதுச்சேரி:அன்னை நிரந்தரமாக புதுச்சேரியில் வந்து தங்கிய தினத்தையொட்டி நேற்று, அரவிந்தர் அறையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அரவிந்தரை ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்டு கடந்த 1920ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி அன்னை நிரந்தரமாக புதுச்சேரியில் வந்து தங்கினார். அன்னை புதுச்சேரிக்கு நிரந்தரமாக வருகை தந்த 99ம் ஆண்டு தினமான நேற்று காலை அரவிந்தர் ஆசிரமத்தில் தன்னார்வலர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அரை மணி நேரம் கூட்டு பிரார்த்தனை நடந்தது.பின்னர் ஆசிரமத்தின் உள்ளே கிழக்கு பகுதியில் முதல் தளத்தில் இருக்கும், அரவிந்தர் அறை தரிசனத்திற்கு செயின்ட் ழீல் வீதியில் உள்ள சிறப்பு வாயில் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு ஏராளமானோர் அறையை தரிசனம் செய்தனர்.மேலும் மரைன் வீதியில் இருக்கும் முதன்மை வாயில் வழியாக சென்றும் அரவிந்தர், அன்னை சமாதியில் பக்தர்கள் தரிசனம் மற்றும் தியானம் செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X