| தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது போலீசில் புகார் Dinamalar
தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது போலீசில் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
23:37

- நமது நிருபர் -


பொய் வாக்குறுதி தந்த, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.


சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வானகரம் - வாலாஜா வரை, நான்கு வழிச்சாலையாக உள்ளது.விரிவாக்கம்இதை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்ய, 2013ல் தனியார் நிறுவனத்துடன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் செய்தது.பணிகள் துவங்கப்படாமல் கிடப்பில் உள்ளது. அதே நேரத்தில், சாலை விரிவாக்கத்தை காரணம் காட்டி, இச்சாலையில் உள்ள, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.சாலையை மேம்படுத்தும் பணிகள், மேற்கொள்ளப்படவில்லை. மதுரவாயல், வானகரம், வேலப்பன்சாவடி, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில், சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது.சமரச பேச்சுஇதனால், விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.இதையடுத்து, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்கத்தினர், பொதுமக்கள், வியாபாரிகள் இணைந்து, சாலையை புனரமைக்க, ஜனவரியில் முயற்சி எடுத்தனர்.அங்கு வந்த போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அதிகாரிகள், சமரச பேச்சு நடத்தினர். வானகரம், வேலப்பன்சாவடி உள்ளிட்ட சந்திப்புகளில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிமென்ட் சாலை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.புகார்மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும், அந்த புனரமைப்பு பணிகள் இன்னும் நடக்கவில்லை. இதனால், பொய் வாக்குறுதி அளித்த அதிகாரிகள் மீது, கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் என, மதுரவாயல் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக, மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள், இன்று விளக்கம் அளிக்க உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X