தற்கொலைகளுக்கு காரணம் மொபைல் எண்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
23:41

நீலாங்கரை போலீசார் செம, 'காமெடி!'
நீலாங்கரை:நீலாங்கரை போலீசாரை, பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள, பொதுவான மொபைல் எண்ணில், கடைசி மூன்று இலக்கம், '174' என இருந்தது.இதனால் தான், அந்த காவல் நிலைய எல்லையில், தற்கொலைகள் அதிகமாக நடப்பதாக நம்பி, அந்த எண்ணையும், போலீசார் துாக்கி எறிந்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அதிக வழக்குகள்கிழக்கு கடற்கரை சாலையில், நீலாங்கரை காவல் நிலையம் உள்ளது. கொட்டிவாக்கம், பாலவாக்கம் முதல், அக்கரை வரை, பல்வேறு பகுதிகள், இந்த காவல் நிலைய எல்லையில் வரும்.கடற்கரை விடுதிகள், சொகுசு பங்களாக்கள் என, வி.ஐ.பி.,க்கள் பகுதியாக இருப்பதாலும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பகுதி என்பதாலும், இந்த காவல் நிலையத்தில் பணியாற்ற, போலீசார் அதிகம் விரும்புவர்.இந்த காவல் நிலையத்தில், 044- - 2449 1196 என்ற தொலைபேசி எண் இருந்தது. இந்த எண்ணின் சேவை, சில ஆண்டுகளுக்கு முன் துண்டிக்கப்பட்டு, 94981 00174 என்ற மொபைல் எண், பொது எண்ணாக பயன்படுத்தப்பட்டது.பொதுமக்கள், நீலாங்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள, இந்த எண்ணை பயன்படுத்த, போலீசார் அறிவிப்பு செய்தனர்.இந்நிலையில், நீலாங்கரை காவல் நிலையத்தில், தற்கொலை வழக்குகள், சமீபகாலமாக அதிகம் பதிவாகின. பழைய எண்பொதுவாக, தற்கொலை சம்பவங்களின் போது, குற்ற விசாரணை முறை சட்டம், பிரிவு, 174ன் கீழ், காவல் நிலையங்களில், வழக்கு பதிவு செய்யப்படும்.நீலாங்கரை காவல் நிலையத்தில், மாற்றப்பட்ட புதிய எண்ணில், கடைசி மூன்று இலக்கம், 174 என, முடிவதால் தான், தங்கள் எல்லையில், தற்கொலைகள் அதிகம் நடப்பதாக, போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து, அனைத்து காவலர்களும் கூடி பேசி, ஒரு முடிவுக்கு வந்தனர். இதன்படி, 94981 00174 என்ற மொபைல் எண்ணை துாக்கி வீசி, மீண்டும், 044 -- 2449 1196 என்ற காவல் நிலையத்தின் பழைய எண்ணை பெற்றுவிட்டனர்.பொதுமக்கள், இந்த எண்ணில் தொடர்பு கொள்ள, ஆங்காங்கே அறிவிப்பும் செய்து உள்ளனர். காவல் நிலையத்தின் தொடர்பு எண்ணை மாற்றிய பின், தற்கொலை சம்பவங்கள் குறைந்திருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X