| இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி Dinamalar
இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
23:41

சென்னை:மின்சார துறை தொடர்பாக, இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, மின் வாரியத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.சென்னை, அண்ணா சாலையில், மின் வாரிய வளாகம் உள்ளது. அங்கு, 10 மாடி மின் வாரிய தலைமை அலுவலகம், மாநில மின் பகிர்ந்தளிப்பு மையம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள், மின் உற்பத்தி, மின் வினியோகம் உட்பட, மின்சாரம் தொடர்பாக தெரிந்து கொள்ள, மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு வருகின்றனர்.இந்நிலையில், 10 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மின்சாரம் மற்றும் மின் வாரிய செயல்பாட்டை தெரிந்து கொள்ள, நேற்று, மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்திற்கு வந்தனர். அவர்களுக்கு, மின் வாரிய அதிகாரிகள், பயிற்சி அளித்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X