| கொலை, தற்கொலை, பலி Dinamalar
கொலை, தற்கொலை, பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
23:46

தந்தை துாக்கிட்டு தற்கொலை


காசிமேடு: காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம், 58; மீனவர். நேற்று அதிகாலை, வீட்டில் உள்ள மின் விசிறியில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காசிமேடு போலீசார், உடலை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், பரமசிவத்தின் மகள், காமினி, 20; கல்லுாரி மாணவி. ஆந்திராவைச் சேர்ந்த சரத் என்பவரை காதலித்து, நேற்று முன்தினம், ரகசிய திருமணம் செய்து கொண்டார். இதனால், மனமுடைந்த பரமசிவம், தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.


மகனிடம் கோபித்து தந்தை தற்கொலை


ஆலந்துார்: ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், 69; ஓய்வுபெற்ற அரசு ஊழியர். மனைவி, மகன்களுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மகன் ஆனந்துடன் குடும்ப பிரச்னை காரணமாக, தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த சீனிவாசன், தன் அறைக்கு சென்று, துாக்கிட்டு தற்கொலை செய்தார். உடலை மீட்ட ஆதம்பாக்கம் போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.


கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை


மடிப்பாக்கம்: கீழ்க்கட்டளை, டாக்டர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 64; தொழில் அதிபர். இவரது மனைவி பவானி, 55. சுப்ரமணி உடல்நல பாதிப்பு காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன் உயிரிழந்தார். சோகத்தில் மூழ்கிய பவானி, நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை மீட்ட, மடிப்பாக்கம் போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.


சாலை விபத்தில் வாலிபர் பலி


பாடி: கொடுங்கையூரைச் சேர்ந்தவர், ரங்கராஜன் மாதவன், 29; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, பாடி மேம்பாலம் கீழே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அன்றைய தினம் இரவே உயிரிழந்தார். பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.


ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


கோயம்பேடு: கடலுாரைச் சேர்ந்தவர், சபரிநாதன், 26. கோயம்பேடில், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம், காலை முதல் இரவு வரை, அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இது குறித்த தகவலையடுத்து, கோயம்பேடு போலீசார், கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, சபரிநாதன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. உடலை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்


.டீக்கடைக்காரர் பலி


கிண்டி: மடுவாங்கரையை சேர்ந்தவர் மகேந்திரன், 36; டீக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய, வீட்டின் மாடியில் ஏறியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தார். பலத்த காயத்துடன், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று இறந்தார். கிண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X