மறு சுழற்சி! இளநீர் கழிவுகளில் இருந்து நார் தயாரிப்பு; அனைத்து மண்டலத்திலும் விரிவாக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2019
04:41

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், கிடங்கில் சேரும் குப்பையின் அளவை குறைக்கவும், மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, இளநீர் கழிவுகளில் இருந்து, நார் தயாரிக்கும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது.சென்னை மாநகராட்சியில், தினமும், 5,400 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. 'பிளாஸ்டிக்' பொருட்கள் தடைக்கு பின், 5,100 டன் என, குறைந்துள்ளது. பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் கிடங்கில் கொட்டும் குப்பையை, படிப்படியாக குறைக்க, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.மக்கும் குப்பையில் இருந்து உரம் மற்றும் எரிவாயு தயாரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை துகளாக்கி, சாலை போட பயன்படுத்தப்படுகிறது. பூங்காவிலும், மரக்கழிவில் இருந்து, உரம் தயாரிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது.தற்போது, கோடைக் காலத்தில், அதிகளவு இளநீர் விற்பனை சூடுபிடித்து உள்ளதால், அதனால், கழிவுகளும் அதிகரித்து உள்ளன. சென்னையில் தினமும், டன் கணக்கில், இளநீர் கழிவுகள், குப்பை தொட்டியில் கொட்டப்படுகின்றன. வீசி எறியும், இளநீர் மட்டையில் தேங்கும் நீரில் இருந்து, கொசு உற்பத்தி, சுகாதார சீர்கேடு உருவாகுகிறது. இதனால், இளநீர் கழிவுகளை, மறு சுழற்சி செய்யும் திட்டத்தை, மாநகராட்சி துவங்கி உள்ளது. இளநீர் கழிவுகளை தனியாக சேகரித்து, இயந்திரத்தில் அரைத்து நார் தயாரிப்படுகிறது.முதற்கட்டமாக, அடையாறு மண்டலம், 173வது வார்டு, எம்.ஆர்.சி., நகரில், 3 லட்சம் ரூபாய் செலவில், இளநீர் கழிவில் இருந்து நார் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் 'ராம்கி' நிறுவனம் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. தற்போது, அடையாறு மண்டலத்தில் உள்ள, 13 வார்டுகளில் இருந்து, மினி லாரி மூலம், இளநீர் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இரண்டு வாரத்தில், 200 கிலோ நார் தயாரிக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக, இதர மண்டலத்திலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.கிடங்கில் குப்பை சேர்வதை குறைக்க, இளநீர் கழிவில் இருந்து நார் தயாரிக்கப்படுகிறது. மின்சாரம் மற்றும் ஊழியர்கள் ஊதியத்தை ஈடு செய்ய, நார் விற்பனை செய்கிறோம். கயிறு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தென்னை மரம் வளர்ப்போரிடம் பேசி வருகிறோம். அவர்களும், மாநகராட்சியை தொடர்பு கொள்ளலாம். ஓரிரு மாதங்களில், இதர மண்டலங்களில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். மொத்த மறு சுழற்சி மூலம், 500 டன் குப்பை குறையும்.மாநகராட்சி அதிகாரிகள் - சென்னையில் உள்ள மறு சுழற்சி கூடங்கள்


உரம் தயாரிக்கும் கூடம் - 161


இயற்கை எரிவாயு- பசுமை குடில் - 34


பிளாஸ்டிக் அரவை இயந்திரங்கள் - 50


பூங்காவில் உரம் தயாரிப்பு - 130
- -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manian - Chennai,இந்தியா
29-ஏப்-201923:22:22 IST Report Abuse
Manian தனியார் குறு, சிறு தொழில்களை மாநகரம் செய்தால், லஞ்சமே, நஷ்டமே வரும். மக்கள் வரிப் பணம் கொள்ளை போகும்?
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
29-ஏப்-201909:09:14 IST Report Abuse
Srinivasan Kannaiya இனி பிளாஸ்டிக் கயிறுகள் உபயோகிக்க கூடாது ... தென்னை கழிவுகளில் வரும் கயிறுகலைதான் உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் போடலாம்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
29-ஏப்-201907:55:34 IST Report Abuse
Bhaskaran பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து தார்த் தயாரித்தது சாலைபோடுவது சொல்லிக்கொண்டே இருக்கின்றனர் செயலில் ஒன்றயும் காணோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X