கறவை மாடுகள் சினைக்கு வந்தவுடன், 18 மணி நேரத்தில், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும் என, கால்நடை துறையினர் தெரிவித்தனர்.இது குறித்து, ஏனாத்துார் உழவர் பயிற்சி மைய பேராசிரியர் மற்றும் தலைவர், கோபி கூறியதாவது:கறவை மாடுகளுக்கு, சினை பருவத்திற்குரிய அறிகுறிகள், காலை நேரத்தில் தென்பட்டால், மாலை நேரத்திலும்; மாலை நேரத்தில் தென்பட்டால், காலை நேரத்திலும், செயற்கை கருவூட்டல் ஊசி போட வேண்டும்.அறிகுறி தெரிந்த, 18 மணி நேரத்திற்குள், மாடுகளை தனி இடத்தில் கட்டி, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகே, செயற்கை கருவூட்டல் ஊசி செலுத்த வேண்டும்.