சென்னை போக்குவரத்து மேம்பாட்டுக்கு ரூ.1.47 லட்சம் கோடி! 2048 வரையிலான காலத்துக்கு மதிப்பீடு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

04 மே
2019
00:46
பதிவு செய்த நாள்
மே 03,2019 22:28

சென்னை பெருநகரில், அனைத்து நிலைகளிலும், போக்குவரத்து கட்டமைப்புகளை, 2048ம் ஆண்டுக்குள் மேம்படுத்த, 1.47 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


சென்னையில், அனைத்து வகை போக்குவரத்து வசதிகளையும் ஒருங்கிணைத்து, மேம்படுத்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என, அரசு அறிவித்தது. இதற்கான, பூர்வாங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, சாத்தியக்கூறு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.ஊக்குவிப்புதமிழக அரசின் பல்வேறு துறைகள் மட்டுமல்லாது, தேசிய, சர்வதேச அளவிலான நிறுவனங்களின் பங்களிப்பு அடிப்படையில், திட்டங்கள் நிறைவேற்ற வேண்டிய தேவை இருப்பதாக, இதற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டம் சமீபத்தில் நடந்தது.இது குறித்து, உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னை பெருநகர் பகுதியில், 20 ஆண்டுகளில், போக்குவரத்து தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றங்களை அடிப்படையாக வைத்து, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், 2048ம் ஆண்டு வரையிலான காலத்தில் ஏற்படும் வளர்ச்சி குறித்த, உத்தேச மதிப்பீட்டில், திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆறு வழித்தடங்களில், மக்கள் அதிகமாக குடியேறுவதை ஊக்குவிக்கும் வகையில், கட்டடங்களுக்கான தளபரப்பு குறியீட்டை அதிகரிக்க வேண்டும்.


கட்டமைப்பு

இதன்படி, பழைய சிறுசேரி சாலை, ஜி.எஸ்.டி., சாலை, சென்னை - பெங்களூரு சாலை, சி.டி.எச்., சாலை, ஜி.என்.டி., சாலை, வெளிவட்ட சாலை ஆகியவற்றில், புதிய குடியிருப்புகளை அதிகரிக்கலாம்.இத்துடன், 2048 வரையிலான காலத்தில் மேற்கொள்ள வேண்டிய, போக்குவரத்து கட்டமைப்பு திட்டங்களுக்கு, 1.47 லட்சம் கோடி ரூபாய் தேவை என, மதிப்பிடப்பட்டுள்ளது.


இதில், குறுகியகால திட்டங்களுக்கு, 28 ஆயிரத்து, 643 கோடி ரூபாயும், மத்திய கால திட்டங்களுக்கு, 2,889 கோடி ரூபாயும், நீண்டகால திட்டங்களுக்கு, 1.16 லட்சம் கோடி ரூபாயும் தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த அறிக்கை அடிப்படையில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தேவையான திட்டங்கள் தயாரிக்க, வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
04-மே-201909:32:50 IST Report Abuse
THANGARAJ 1 .47 லட்சம் கோடி சென்னைக்கு மட்டும் போக்குவரத்து விரிவாக்கம் செய்ய தேவை என்றால், மற்ற இடங்களையும் சேர்த்தால் எவ்வளவோ? அதற்கு பதிலாக சில ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கார், பைக் போன்றவற்றை மறு வடிவம் செய்தால் என்ன? பொது போக்குவரத்தை அதிகம் செய்தால் என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X