போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2019
23:24

தற்கொலை வழக்கில் திருப்பம்செங்குன்றம்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கந்தசாமி, 38; சுமை துாக்கும் தொழிலாளி. வழக்கம்போல், ஏப்., 30ல் வேலை முடித்து, இரவு செங்குன்றம், வண்டிமேடு, அரிசிசந்தையில் உள்ள மொட்டை மாடியில் துாங்கச்சென்றார். 1ம் தேதி காலை, மாடியில் இருந்து விழுந்து, சடலமாக கிடந்தார்.செங்குன்றம் போலீசாரிடம், கந்தசாமியுடன் இருந்த, எம்.கே.காந்தி தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார், 30, அளிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், 38, ஆகியோர், 'கந்தசாமி போதையில் தவறி விழுந்து இறந்ததாக' தெரிவித்திருந்தனர்.பிரேத பரிசோதனை முடிவு, வழக்கில் திருப்பம் ஏற்படுத்தியது. அதில், கந்தசாமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதாக இருந்தது. இதன் அடிப்படையில் போலீசாரின் விசாரணையில், சந்தோஷ்குமார், ராஜேஷ், 100 ரூபாயை, கந்தசாமி, 'கமிஷன்' பெற்றுவிட்டதால், அவரது கழுத்தை நெரித்து கொன்றது தெரிய வந்ததையடுத்து, இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர்.அராஜகத்தில் ஈடுபட்ட வக்கீல் கைதுசென்னை: புரசைவாக்கத்தைச் சேர்ந்தவன், ராஜா, 36; வழக்கறிஞர். இவனது, மாமனார், வாசு, 66. வேப்பேரியில், மனைவி ராணி, 61, மகன், நிர்மல், 26, ஆகியோருடன் வசிக்கிறான். ராஜாவுக்கும், வாசு குடும்பத்திற்கும், சொத்து பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, ராஜா, தன் கூட்டாளிகள், நான்கு பேருடன், மாமனார்வீட்டிற்கு சென்றுள்ளான்.பின், உருட்டுக்கட்டையால், 'டிவி' உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடியதுடன், வாசுவை வெட்டி, தடுக்க முயன்ற, ராணி, நிர்மலை, பிளேடால் அறுத்து தப்பினர். வேப்பேரி போலீசார், ராஜா மற்றும் அவனது கூட்டாளிகள் நான்கு பேரை, நேற்று கைது செய்தனர்.பஸ் ஓட்டுனருக்கு பாட்டில் குத்துதாம்பரம்: வண்டலுாரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 42; பேருந்து ஓட்டுனர். நேற்று முன்தினம் மாலை, பணிமனை காத்திருப்போர் அறைக்கு, அலுவலக வேலையாக சென்றபோது, சகஓட்டுனரான குமார் என்பவனை பார்ப்பதற்காக, அவரது மகள் வந்திருந்தார். குமாரின் மகள் என தெரியாமல், அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும்படி, கோவிந்தராஜ் கூறியதாக தெரிகிறது.ஆத்திரமடைந்த குமார், அருகில் இருந்த பாட்டிலை எடுத்து, கோவிந்தராஜின் முகத்தில் குத்தினான். அங்கிருந்த ஊழியர்கள், கோவிந்தராஜை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பிய குமாரை, தாம்பரம் போலீசார் தேடி வருகின்றனர்.நிருபர் மீது தாக்குதல்ஆர்.கே.நகர்: கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி, 36; பத்திரிகை நிருபர். நேற்று முன்தினம் நள்ளிரவு, சத்தியமூர்த்தி தெரு வழியாக பைக்கில் வந்த மூர்த்திக்கும், குடிபோதையில் தள்ளாடி வந்த பாரதி நகரைச் சேர்ந்த, முனுசாமி, 36, என்பவருக்கும், வாய் தகராறு ஏற்பட்டது. இதில், முனுசாமி, மூர்த்தியை தாக்கினார். விசாரித்த, ஆர்.கே.நகர் போலீசார், அவர்களை சமரசப்படுத்தி அனுப்பினர். இந்நிலையில், மூர்த்தியின் நண்பர்கள் தன்னை தாக்கியதாகக் கூறி, முனுசாமி, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.வீட்டில் திருடியவன் கைதுகுமரன்நகர்: மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர், சுரேந்திரன், 32. ஏப்., 20ம் தேதி, வெளியே சென்று, மறுநாள் வந்தபோது, வீட்டின் பூட்டு உடைத்து, பீரோவில் இருந்த, 12 சவரன் நகையை, மர்மநபர்கள் திருடியது தெரிய வந்தது. விசாரித்த, குமரன் நகர் போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த, வடிவழகன், 27, என்பவனை, நேற்று காலை கைது செய்து, 11 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.4 சவரன் நகை திருட்டுஆவடி: ஆவடியைச் சேர்ந்தவர், கண்ணன், 48. ஏப்., 28ல், குடும்பத்தினருடன் சிவகங்கைக்குச் சென்று, நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டிலிருந்த, 4 சவரன் நகை, வெள்ளி கொலுசுகள் உள்ளிட்டவற்றை, மர்ம நபர்கள் கதவை உடைத்து, திருடி சென்றது தெரிய வந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண்ணின் மண்டை உடைப்புபட்டாபிராம்: பட்டாபிராமைச் சேர்ந்தவர், ஏழுமலை, 49. மனைவி வச்சலா, 47. இவருக்கும், ஏழுமலையின் சகோதரர்களான மணி, 52, சேகர், 50, ஆகியோருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டதில், மணியும், சேகரும், வச்சலாவின் தலையில் தாக்கியுள்ளனர். பட்டாபிராம் போலீசார் மணி, சேகரை கைது செய்தனர்.மொபைல் பறித்த நால்வர் கைதுசேத்துப்பட்டு: சேத்துப்பட்டில், அடிக்கடி மொபைல் போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட, ஷெனாய் நகரைச் சேர்ந்த, மூன்று சிறுவர்கள் மற்றும்ஈஸ்வர் என்பவன் உட்பட, நான்கு பேரை, நேற்று மதியம், போலீசார் கைது செய்தனர்.லாட்டரி விற்ற இருவர் கைதுகீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம், பூபதி நகரில் நேற்று மதியம் போலீசார் கண்காணிப்பின்போது, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த கணேஷ், 32, ராஜேஷ், 36, ஆகியோர், லாட்டரி விற்றது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், 23 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X