| ஸ்ரீ அருணாச்சலா பள்ளி தொடர் சாதனை வெற்றி Dinamalar
ஸ்ரீ அருணாச்சலா பள்ளி தொடர் சாதனை வெற்றி
Advertisement
 

பதிவு செய்த நாள்

03 மே
2019
23:51

புவனகிரி:ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.புவனகிரி ஸ்ரீ அருணாச்சலா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வை எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


பிளஸ் ௨ பொதுத்தேர்வில் வசுந்தராதேவி- 566, வாசுதேவன்- 558 மற்றும் திவ்யா- 525 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மற்ற மாணவர்கள் அனைவரும் சிறப்பிடத்தில் தேர்ச்சி பெற்றனர்.எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் ஸ்ரீபுஷ்க்கலை 480, ரம்யா 480, தமிழருவி 470 மற்றும் ஸ்ரீஹரிவேலன் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியளவில் சிறப்பிடம் பெற்றனர்.அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் வெற்றிக்கு உறுதுனையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தாளாளர் இரத்தின சுப்பிரமணியன் சால்வை அணிவித்து ஊக்கப்பரிசு வழங்கினார்.முதல்வர் சவரிமுத்து, தலைமை ஆசிரியை கவிதா உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X