| இல்லை!புதிய பஸ்களில் நடத்துனருக்கு இருக்கை ஒதுக்கீடு...டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு சிக்கல் Dinamalar
இல்லை!புதிய பஸ்களில் நடத்துனருக்கு இருக்கை ஒதுக்கீடு...டிக்கெட் எடுப்பதில் பயணிகளுக்கு சிக்கல்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

05 மே
2019
02:47
பதிவு செய்த நாள்
மே 04,2019 23:33

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிதாக ஒதுக்கப்பட்ட பஸ்களில், நடத்துனருக்கும் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு, புதிதாக, 75க்கும் மேற்பட்ட பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், பாட்டு கேட்கும் வசதி, பஸ் நிறுத்தத்தை ஒலிபெருக்கியில் அறிவிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள், தனியார் பஸ்களுக்கு இணையாக உள்ளன.நடு இருக்கைஆனால், நடத்துனர்களுக்கு மட்டும் இருக்கை ஒதுக்கப்படவில்லை. ஏற்கனவே உள்ள பஸ்களில், பின் படிக்கட்டை ஒட்டி, நடத்துனருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருக்கும். தற்போதுள்ள பஸ்களில், அந்த இடத்திலும், பயணியருக்கான இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், பஸ்சின் கடைசியில் உள்ள ஐந்து இருக்கைகளில், நடு இருக்கையை, நடத்துனருக்காக ஒதுக்கி உள்ளனர். பெண் பயணியர் அதிகம் இருக்கும் நெரிசலான நேரத்தில், நடத்துனர்கள் இதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஒதுக்க வேண்டும்மேலும், நடுப்பகுதியில் இருக்கை இருப்பதால், பயணியர் ஏறி, இறங்குவது, திரும்பும் போது பக்கம் பார்ப்பது உள்ளிட்ட செயல்களை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதற்கு தீர்வாக, தனி இருக்கையை நடத்துனர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.


இது குறித்து, ஆம் ஆத்மி தொழிற்சங்கத்தின் சார்பில், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு, 'நடத்துனருக்கு தனி இருக்கை இல்லை. 'ஆனால், பேருந்தில் ஏறும் வழியில், இடதுபுறம் உள்ள கடைசி இருக்கையில், பெண் பயணியருக்கு இடைஞ்சல் இல்லாத வகையில், நடத்துனர் அமரலாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது' என, பதில் அளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X