| மாநில அளவிலான இறகு பந்து போட்டி, திருவள்ளூர் அணி வெற்றி Dinamalar
மாநில அளவிலான இறகு பந்து போட்டி, திருவள்ளூர் அணி வெற்றி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 மே
2019
23:17

கடலுார்: மாநில அளவிலான இறகு பந்து போட்டியில், திருவள்ளூர் அணி கோப்பையை வென்றது.கடலுார் மாவட்ட இறகு பந்து நலச்சங்கம், தமிழ்நாடு மாநில இறகு பந்து கழகம் சார்பில், 10 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான இறகு பந்து போட்டி கடலுார் அண்ணா விளையாட்டரங்கில், கடந்த 9ம் தேதி துவங்கியது.போட்டியில் சென்னை, கடலுார், திருச்சி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 129 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நேற்று நடந்த இறுதிப்போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில், சென்னை திருவள்ளூர் அணியை சேர்ந்த தீட்சிதா சிங்ஹா, திக் ஷா வெற்றி பெற்றனர். ஆண்கள் பிரிவில் மோகிட்தர்சன், யோகேஸ்வரன் ஆகியோர் வெற்றி பெற்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவில் திருவள்ளூர் லக் ஷா முதல் இடத்தையும், மதுரையைச் சேர்ந்த மிரிதிணி ராமகிருஷ்ணன் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவையை சேர்ந்த சிவசரண் முதல் இடத்தையும், திருவள்ளூர் யோகேஸ்வரன் இரண்டாம் இடத்தை பிடித்து கோப்பையை பெற்றனர்.பரிசளிப்பு விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மாறன் முன்னிலை வகித்தார். மாநில செயலர் அருணாசலம்,போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளை வழங்கினார். பா.ம.க., மாநில துணை பொதுச்செயலர் தாமரைக்கண்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, தினகரன், ஆர்கிடெக் அருண், மில் அதிபர் ராமசாமி, வெங்கடேசன், நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சிவகுருநாதன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X