வீட்டுமனையில் இணைப்பு சாலை மாநகராட்சி அதிகாரிகள்,சாதனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
03:54

மாதவரம்:காலி வீட்டுமனையில், இணைப்பு சாலை அமைத்து, சாதனை படைத்த மாநகராட்சி அதிகாரிகளால், இடத்தை பறிகொடுத்த பெண், அதை மீட்க, போராடி வருகிறார்.




சென்னை அடுத்த திருவள்ளூர், வேப்பம்பட்டு, சுந்தரபாபு நகரைச் சேர்ந்தவர் சுகுமார். அவரது மனைவி பிரேமலதா, 50.அவருக்கு சொந்தமான, 2,400 சதுர அடி காலி மனை, மாதவரம் மண்டலம், 24வது வார்டு, சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், பிரதான சாலையில் உள்ளது.முதுகு தண்டுவட பாதிப்பால் அவதியுற்ற பிரேமலதாவால், அடிக்கடி சூரப்பட்டிற்கு சென்று, தன் இடத்தை பார்க்க முடியாமல் இருந்தார்.




அவரது கணவரும், அலுவல் தொடர்பாக, அங்கு செல்ல முடியவில்லை.இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி அதிகாரிகள், பிரேமலதாவிற்கு சொந்தமான மனை எண், 406க்கு முன் உள்ள, 405ல், சிவப்பிரகாசம் நகர், ஏழாவது தெருவிற்கான, இணைப்பு சாலையை அமைத்தனர்.



இதையடுத்து, தனக்கு சொந்தமான மனை எண், 406ல், மற்றொருவர் வீடு கட்டி இருப்பது குறித்து, பிரேமலதா அறிந்தார். பிரச்னை குறித்து, கடந்தாண்டு, அம்பத்துார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.




போலீசாரின் விசாரணையில், பிரச்னைக்குரிய இடத்தை, தாலுகா அலுவலக, நில அளவை அதிகாரிகள் மூலம், அளவீடு செய்ய வேண்டும் என்பது தெரிய வந்தது.அளவீடு செய்து, அறிக்கை அளித்தால் மட்டுமே, பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என, அம்பத்துார் போலீசார், கடந்தாண்டு ஆகஸ்டில், மாதவரம் தாசில்தாருக்கு, கடிதம் வழங்கினர்.




கடிதம் வழங்கி, ஒன்பது மாதங்களாகியும், மாதவரம் தாசில்தாரின் அலட்சியத்தால், நில அளவீடு அறிக்கை பெற முடியாமல், பிரேமலதா மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரால், அலைய முடியவில்லை என, அவரது கணவர் சுகுமார், நில அளவீடு அறிக்கை பெற, தற்போது அலைந்து கொண்டிருக்கிறார்.




மாதவரம் மாநகராட்சி அதிகாரிகளின் குளறுபடியால், எங்களுக்கு சொந்தமான இடம் பறிபோய் உள்ளது. தற்போது, என் மனைவியின் மருத்துவ செலவுகளுக்கு கூட, போதிய பண வசதியின்றி தவிக்கிறேன்.தாலுகா அதிகாரிகள், மனை அளவீடு செய்து, அறிக்கை கொடுத்து, எங்களது இடத்தை மீட்க, உதவி செய்ய வேண்டும்.ஜி.ஆர்.சுகுமார், 59,வேப்பம்பட்டு, திருவள்ளூர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X