'உலக தரமான வீரர்கள் உருவாக வேண்டும்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மே
2019
23:40

சென்னை: 'உலக தரமான ஸ்குவாஷ் வீரர்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' என, இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பின் தலைவர், தேவேந்திரநாத் சாரங்கி மற்றும் எச்.சி.எல்., நிறுவனத்தின் செயல் அலுவலர், சுந்தர் மகாலிங்கம் உள்ளிட்டோர், சென்னையில் நேற்றுகூறியதாவது:உலகின், 50 முன்னணி ஸ்குவாஷ் வீரர்களில், இந்தியாவைச் சேர்ந்த, ஜோஸ்னா சின்னப்பா, சவுரவ் கோஷல் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.முழு உடல் தகுதி, மனவலிமை, சிந்திக்கும் ஆற்றலில் அமைந்த, மிகக் கடினமான போட்டியாக, ஸ்குவாஷ் உள்ளது.அதனால், இளம் தலைமுறையினர், இதில் அதிகமாக ஈடுபடுவதில்லை. ஆனால், உலகத்தரமான, இந்திய ஸ்குவாஷ் வீரர்கள் உருவாக வேண்டிய தேவை உள்ளது.அதற்காக, எச்.சி.எல்., நிறுவனமும், ஸ்குவாஷ் ராக்கெட் கூட்டமைப்பும் இணைந்து, சென்னையில், ஸ்குவாஷ் பயிற்சி மையத்தை துவங்கி உள்ளோம்.இதில், ஜூனியர், சீனியர்களுக்கு, ஸ்குவாஷ் பயிற்சி அளிக்கிறோம். பயிற்சியை, 15 நாட்கள், ஆறு மாதங்கள் என்ற, இரு கால அளவாக பிரித்துள்ளோம்.பயிற்சிக்கு பின், அவர்களுக்கான உடல், மன, விளையாட்டு பயிற்சிகள், சர்வதேச வீரர்கள் பயன்படுத்தும் நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றைக் கற்றுத் தருகிறோம்.உலகத்தர உலக போட்டிகளில் அவர்கள் பங்கேற்கும் வகையில், தயார்படுத்த உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X